பிரபல கோயிலில் குடும்பத்துடன் திடீர் தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல கோயிலில் குடும்பத்துடன் திடீர் தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்! வைரலாகும் புகைப்படம்!

'டாக்டர்', 'டான்', 'பிரின்ஸ்' வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' திரைப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், நேற்று குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கி, தன் திறமையால் உழைத்து மெல்ல வெள்ளித்திரையில் காலடி பதித்து இன்று அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படக்கூடிய ஒரு முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

இவர் சினிமா பின்னணியில் வந்தவர் இல்லை என்றாலும் இவருடைய உழைப்பினாலேயே இந்தளவுக்கு முன்னேறியிருப்பது சினிமாத்துறையில் நுழைய விரும்பும் பல இளைஞர்களுக்கும் உதாரணமாக பார்க்கப்படுகிறது.

காமெடி கலந்த ஹீரோயிஸம் பெரும்பாலும் சிவகார்த்திகேயனுக்கு பொருந்திவிடும். அந்த வகையில், 'டாக்டர்', 'டான்' உள்ளிட்ட பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. தற்போது இவரது நடிப்பில் 'அயலான்' திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் பணிபுரிந்தும் வருகிறார்.

இந்நிலையில், நேற்று, நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் நாகப்பட்டிணத்தில் உள்ள திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். அங்கு சிவகார்த்திகேயனும், அவரது குடும்பத்தினரும் சிறப்பு பூஜைகள் செய்து கடவுளை வழிபட்டனர். இவர் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com