லோகேஷ் - ரஜினி கூட்டணியில் இணைகிறாரா சிவகார்த்திக்கேயன்?

rajini sivakarthikeyan
rajini sivakarthikeyan

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ரஜினிகாந்த்தின் 171 ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.

மாநகரம், கைதி, மாஸ்டர்,விக்ரம் மற்றும் லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார். மொத்தமாகவே 10 படங்கள் தான் இயக்கவுள்ளதாக அறிவித்த லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து டாப் இயக்குனராக வலம்வருகிறார்.

கடைசியாக விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தொடர்ந்து ரஜினியின் 171 ஆவது படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான கதையை உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ஷூட்டிங் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தும் கடைசியாக ஜெயிலர் படத்தில் மாஸாக நடித்திருந்தார். தற்போது இருவர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கும் படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இந்த சூழலில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com