
நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படத்தின் பிரத்யேகத் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். இதன் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி.
'டாக்டர்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, டப்பிங் பணிகள் நடப்பதாகச் சொல்லப் ப்டுகிறது. அப்படி சிவகார்த்திகேயன் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் லைப்ரரியில் புத்தகம் படிப்பது போன்ற போட்டோ வெளியாகி உள்ளது.