லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படமும் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
லோகேஷ் இயக்கிய மாநகரம் திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியானது. நிறைய பேர் இந்தப்படம்தான் லோகேஷின் முதல் படம் என்று நினைக்கின்றனர். ஆனால் 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி 'அவியல்' என்றப் படத்தின் மூலமே சினிமா துறையில் கால்பதித்தார். அவியல் படம் நான்கு குறும்படங்கள் சேர்ந்த படமாகும். அந்த நான்கு குறும்படங்களை ஆல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் மேஹ்ரா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கினார்கள்.
இதனையடுத்துதான் அடுத்த ஆண்டு 'மாநகரம்' படம் வெளியானது. 2019ம் ஆண்டு கைதி படத்தை கார்த்தி வைத்து ஒருநாள் இரவில் நடக்கும் கதையை படமாக எடுத்தார். இப்படம்தான் திரைத்துறையில் லோகேஷின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக 2021ம் ஆண்டு லோகேஷ் விஜய் வைத்து 'மாஸ்டர்' படம் இயக்கினார். இது வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆனது. அதன்பின்னர் லோகேஷ் கமலஹாசனின் விக்ரம் மற்றும் விஜயின் லியோ படங்களை இயக்கினார்.
இயக்குனராக வெற்றிபெற்ற லோகேஷ் 2022ம், ஆண்டு மைக்கல் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கினார். அதன்பின்னர் அர்.ஜே.பாலஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோல் செய்து நடிப்பிலும் களமிறங்கினார்.
தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். அந்தவகையில் எல்.சி.யு வை பற்றிய ஒரு சிறு அறிமுகமளிக்கும் வகையில் குறும்படம் ஒன்றையும் லோகேஷ் இயக்கியுள்ளார். இந்த குறும்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். எல்.சி.யுவில் தான் இயக்கும் படத்தை மட்டும் இணைக்காமல், பிற இயக்குநர்களின் படத்தை இணைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருக்கிறார்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கூடிய விரைவில் இணைய இருப்பதாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்தார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் கதாபாத்திரத்தை எல்.சி.யுவிற்கு அவர் கொண்டு இருப்பதாக தற்போது சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றிபெற்ற படம்தான் மாவீரன்.
லோகியும் மடோன் அஸ்வினும் இதுகுறித்து பேசிவருவதாக செய்திகள் வந்துள்ளன.