எதிர்பார்பை கிளப்பிய அயலான் படத்திற்கு தடை.. ரசிகர்கள் ஷாக்!

அயலான்
அயலான்
Published on

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தையும், வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம்,வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது.

இந்த கடன் தொகையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, 3 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது. மீதத்தொகையை அயலான் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன் திருப்பித்தருவதாக 2021ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.

Aalambana Movie
Aalambana Movie

இந்நிலையில், ஆண்டுக்கு 13 சதவீத வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித்தராமல் நடிகர் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தை நாளையும் (டிசம்பர் 15ம் தேதி) , அயலான் படத்தை 2024 ஜனவரி 14ம் தேதியும் வெளியிட உள்ளதால், இரு படங்களையும் வெளியிட தடை விதிக்க கோரி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சரவணன், டி.ஆர்.எஸ் நிறுவனத்தின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட நான்கு வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அயலான் திரைப்படத்தை அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு வந்துள்ளது. இதேபோல நாளை வெளியாக இருந்த வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com