சிவகுமாரின் திருக்குறள் 100 சொற்பொழிவு!

சிவகுமார்
சிவகுமார்

நடிகர் சிவகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பராமாயணம் பற்றி தொடர் பேருரை நிகழ்த்தி பல்வேறு மக்களின் பாரட்டை பெற்றார். சமீபத்தில் ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் திருக்குறள் 100 என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதன் காணொளி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

இந்த பேருரையில் சிவகுமார் தேர்ந்தெடுக்கபட்ட நூறு குறளுக்கு தன் அனுபவங்கள், தன் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள், கதை மாந்தார்கள் என பலரை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். குறிப்பாக நட்புக்கு எம் ஜி. ஆர் -தயாரிப்பாளர் தேவர், கற்பு நெறிக்கு கே. பி சுந்தராம்பாள் அவர்களின் வாழ்க்கை, கல்விக்கு தனது ஆசிரியர், சினத்திற்கு தனது வாழ்க்கையில் நடந்த செல்ஃபி சம்பவம் இப்படி பல.

இந்த காணொளி முடிந்தவுடன் சிவகுமார் நேரடியாக பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். "கடந்த 2005 முதல் மேக் அப் போடுவதை நிறுத்தி விட்டேன். என் நண்பர் ஒருவர் வற்புறுத்துதலின் பேரில் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தேன். 1330 குறளையும் மேற்கோள் காட்டி பேசுவது கடினம். இதற்கு பல ஜென்மம் எடுக்க வேண்டும். அதனால் செலக்ட்டிவாக பேசினேன். பல தமிழ் இலக்கியங்களை பேச சொல்லி கேட்கிறார்கள். என் சிறிய அறிவுக்கு எட்டிய வரை நான் ஆராய்ச்சி செய்து எழுதுகிறேன், பேசுகிறேன்.

சிவகுமார்
சிவகுமார்

இன்றைய இளைஞர்களையும், இளம் பெண்களையும் ஒன்று மட்டும் கேட்டு கொள்கிறேன். எத்தனை ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் இரவு விழித்திருந்து வேலை செய்ய ஒப்பு கொள்ளாதீர்கள். இரவு அதிக நேரம் விழித்திருந்தால் ஆயுள் குறையும் என்கிறார்கள். எந்த விலங்கும் இரவு விழித்திருப்பதில்லை. இரவு பதினோரு மணியிலிருந்து அதிகாலை நான்கு மணிவரை கண்டிப்பாக தூங்க வேண்டும். என் மகன், மகளை போல் உங்கள் ஒவ்வொருவரையும் கேட்டுகொள்கிறேன்" என்றார்.

சிவகுமாரின் இலக்கிய பயணத்தில் திருக்குறள் 100 ஒரு மைல்கல். சிவாஜி மற்றும் கமலை மட்டும்தான் சிறந்த நடிகர்களாக ஏற்றுக்கொண்டேன் என்கிறார் ஆணித்தரமாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com