நானிக்கு வில்லனாகும் எஸ்.ஜே சூர்யா!

எஸ்.ஜே சூர்யா!
எஸ்.ஜே சூர்யா!

டிகர் நானியின் 31 வது படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் பட இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர், கதாநாயகன் என்று தமிழ் திரை உலகில் முக்கிய நபராக வலம் வந்த எஸ் ஜே சூர்யா, தற்போது மிக முக்கிய வில்லன் நடிகராக மாறி இருக்கிறார். இதனாலே இவரை நடிப்பு அரக்கன் என்று அழைக்கத் தொடங்கி இருக்கிறது தமிழ் திரை உலகம்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா உடைய நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. மேலும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு எஸ் ஜே சூர்யா முக்கிய காரணமாக கருதப்படுகிறார். இதை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவை வில்லனாக நடிக்க வைக்க தமிழக இயக்குனர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்திலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரை உலகில் முக்கிய நடிகர்களின் ஒருவரான நானி உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா ஒப்பந்திருக்கிறார்.

இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். பிரியங்கா அருள் மோகன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று பட குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் எஸ் ஜே சூர்யாவிற்கு தற்போது வரும் கதைகளில் பெரும்பான்மையானவை வில்லன் கதாபாத்திரத்தை கொண்டவையாக இருக்கிறது என்று எஸ் ஜே சூர்யா தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com