இவ்வளவு சர்ச்சையிலும் இவ்வளவு வசூலா?

இவ்வளவு சர்ச்சையிலும் இவ்வளவு வசூலா?

ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் "தி கேரளா ஸ்டோரி", இந்த திரைப்படத்திற்கு கேரளா முதலமைச்சர் பினராயி உட்பட பலவேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த வெள்ளியன்று தமிழகத்திலும் வெளியானது இத்திரைப்படம் அதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.

இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துகளுடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த 32000 இந்து பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் காட்டப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம், நேற்று முதல் திரையிடப்படவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூலித்தது

பல்வேறு சர்ச்சைகளாக மதமாற்றம் செய்யப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக நடத்தப் படுவதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்துக்கு எதிரான படம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரங்கள் செய்யப் பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், மதநல்லிணக்கத்துக்கு எதிரான படமாக தி கேரளா ஸ்டோரி உருவாகியுள்ளதாகவும் ஒரு சாரார் விமர்சித்துள்ளனர்.

எனினும் இரண்டாவது நாள் 12.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று 16.50 கோடி ரூபாய் கலெக்‌ஷன்செய்துள்ளது. ஆக மொத்தம் முதல் வாரம் மொத்தம் 36 கோடி ரூபாய் வரைவசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தி கேரளா ஸ்டோரிபடத்துக்கு கடும் எதிர்ப்பு காணப்படும் நிலையில், முதல் வாரம் 36 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com