வெற்றிமாறனுக்கு குவியும் வெற்றி.. நெதர்லாந்தில் திரையிடப்பட்ட விடுதலை படத்திற்கு கிடைத்த வரவேற்பு!

விடுதலை
விடுதலை

முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூரி. அவருக்கெல்லாம் ஹீரோ கெட்டப் எப்படி செட் ஆகும் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், அனைவரையும் வாயடக்க செய்தவர் தான் நடிகர் சூரி. வெற்றிமாறனின் வெற்றி வரிசையில் விடுதலை படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த படத்தின் 2ஆம் பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷின் தங்கையான பவானி ஸ்ரீ நடித்து அசத்தியிருப்பார். மலைகிராமத்தில் நடக்கும் விஷயங்களை இந்த படத்தில் அப்படியே காண்பித்திருப்பார்கள். வில்லனை பிடிப்பதற்காக கிராம மக்களை போலீசார் எந்த அளவிற்கு சித்ரவதை செய்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார்கள். இதில் போலீசாக நடித்த சூரி என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து இருப்பார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரே வில்லனாகிய விஜய்சேதுபதியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விடுவார். இனி 2ஆம் பாகத்தில் என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சூரி நடிப்பில் உருவான 'விடுதலை 1', 'விடுதலை 2', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்கள் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.

இதில், 'விடுதலை' முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் ஐந்து நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டல் கொடுத்து படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com