கருடனில் காதல் நாயகனாக கலக்கிய சூரி... வைரலாகும் பாடல்!

சூரி
சூரி

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் கருடன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் சூரி அதில் காதல் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான விடுதலை 1 படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வரும் நிலையில், கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்தின் கொட்டுக்காளி படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும், ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலியுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். இந்த ஏழு கடல் ஏழு மலை மற்றும் விடுதலை 2 படங்கள் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்கள் தவிர வெற்றிமாறன் எழுதி, துரை செந்தில்குமார் இயக்கி வரும் கருடன் படத்தில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோருடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சூரி மற்றும் ரேவதி ஷர்மா இடம்பெறும் பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com