வள்ளலார் பாடலுக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!

Music Director Sathya
Music Director Sathya
Published on

19ம் நூற்றாண்டில் மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் தலைவிரித்து ஆடிய போது, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் வள்ளலார். ஜாதியை வெறுத்து சமத்துவத்தை போதித்த மகான் இவர். அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை என்ற தாரக மந்திரம் மூலமாக  ஒளி வடிவில் இறைவனை கண்டவர்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம்  வாடினேன் என்று அனைத்து உயிர்களிடம் அன்பை போதித்தார். இந்த  வள்ளலாரின் கருத்துக்களை உள்வாங்கி மற்றவர்களும் பரப்பும் முயற்சியாக  இசை அமைப்பாளர் சி. சத்யா அன்பை போதிக்கும் வள்ளலாரின் 'மனு முறை கண்ட வாசகம்'  என்ற பாடலுக்கு இசை அமைத்து பாடி உள்ளார் 

"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பிரகடனம் செய்து தமிழகத்தில் இருந்து ஒட்டு மொத்த உலகத்திற்கும் அன்பையும் பண்பையும் போதித்த திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய 'மனு முறை கண்ட வாசகம்' பாடலை பிரபல இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ளதோடு காணொலியாகவும் தயாரித்துள்ளார். 

வள்ளலாரின் வழிகாட்டுதல்களை தனது வாழ்க்கை முறையாக பின்பற்றி வரும் சத்யா, அவரது ஸ்டூடியோவில் கடந்த 14 வருடங்களாக அணையா விளக்கை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இசையமைப்பாளர் C. சத்யா ’எங்கேயும் எப்போதும்’, ‘நெடுஞ்சாலை’, ‘இவன் வேற மாதிரி’ நடிகை திரிஷா நடித்த ’ராங்கி’ மற்றும் அரண்மனை 3 உட் பட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மனு முறை கண்ட வாசகம்' பாடலுக்கு இசை அமைக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் உணர்வு இந்த வருட தைப்பூசத்தின் போது நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறிய சத்யா, இப்பாடல் வெகு விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார் 

 "வள்ளலார் நமக்கு வழங்கியுள்ள அற்புதமான வழிகாட்டு பாடல்களில் ஒன்று தான் 'மனு முறை கண்ட வாசகம்'. 'நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!' என்று செல்லும் இப்பாடலின் அறநெறிகளை பின்பற்றினாலே போதும், உலகில் அன்பு சூழ்ந்து அமைதி நிலவும். எனவே, இந்த பாடலை இன்னும் அதிகமானோருக்கு எடுத்து செல்லும் வகையில் இசையமைத்து பாடியுள்ளேன்,"

 "அன்பும் அறமும் மட்டுமே உலகத்தையும் மக்களையும் தழைக்க செய்யும் மந்திரங்கள். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வள்ளலார் போதித்த இவை இன்றைய நவீன உலகத்திற்கும் மிகவும் பொருத்தமாக உள்ளன. இப்பாடலை வள்ளலார் வழி நடப்போர் மட்டுமின்றி அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன்," என்று  வேண்டுகோள் வைக்கிறார் சி. சத்யா இசையமைத்து பாடி தயாரித்துள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் 'மனு முறை கண்ட வாசகம்' பாடல் காணொலி வடிவில் உலகமெங்கும் விரைவில் வெளியாக உள்ளது. 

இதையும் படியுங்கள்:
எதற்கெடுத்தாலும் கோபப்படும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?
Music Director Sathya

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com