இசை கொடுத்த முத்து.. தேவாவின் சொத்து.. தேசிய விருதை வென்ற ஸ்ரீகாந்த் தேவா!

ஸ்ரீகாந்த் தேவா
ஸ்ரீகாந்த் தேவா

இசையென்றாலே நம் நினைவுக்கு வருவது இளையராஜா தான். இளையராஜா மெட்டுகளுக்கு எப்படி பிரபலமோ, அப்படி அந்த காலத்தில் உள்ள குத்து, கானா பாடலுக்கு பிரபலமானவர் தேவா.

தேவா பாடலுக்கென்று இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற கான்செட்டில் கூட ரசிகர்கள் குதூகலித்தனர். இசையில் கொடிகட்டி பறக்கும் தேவாவின் குரலும் தனித்துவமானது. இன்றும் அவர் பாடலை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இவரின் ஒரே மகன் தான் ஸ்ரீகாந்த் தேவா. இசையால் உருவான சொத்துக்கு இசை வராமல் இருக்குமா. ஸ்ரீகாந்த் தேவாவும் இசையில் ஆர்வம் உள்ளதால் சினிமாதுறைக்குள் நுழைந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு டபுள்ஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதுவரை எண்ணற்ற பாடலை பாடியும், இசையமைத்த அவருக்கு தற்போது உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கருவறையில் இருக்கும் ஒரு குழந்தைக்கு இப்படி ஒரு இசையை யாரும் கொடுக்க முடியாத அளவிற்கு இசையமைத்து அசத்தியிருப்பார். இந்த விருது கிடைத்ததற்கு என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷப்பட்டதே இல்லை என தெரிவித்துள்ளார். எத்தனையோ பெரிய பெரிய படங்களுக்கு இசையமைத்தும், குறும்படம் ஒன்றிற்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பேசிய அவர், சினிமா வேறு, குறும்படம் வேறு அல்ல அனைத்தும் சினிமா தான் என்றார்.

இளைஞர்களில் மிகவும் பேவரைட் ஆன ஒன்று என்றாலே ரீமிக்ஸ் தான். சூப்பர் ஹிட்டான பாடல்களை ரீமிக்ஸ் செய்து மேலும் ஹிட்டடிக்க செய்வதில் ஸ்ரீகாந்த் தேவா கில்லாடி.

ஆடி மாசம் காத்தடிக்க, காதல் வைபோகமே ஆகிய பாடல்களை ரீமிக்ஸ் செய்து அசத்தியுள்ளார். அம்மா மகனின் காதலை வெளிப்படுத்தும் அழகான பாடலான நீயே நீயே நானே நீயே என்ற பாடல் இன்றளவும் அம்மா செல்ல பசங்களுக்கு ஃபேவரைட் தான். இது போன்று காதல், காதல் தோல்வி, குத்து, என அனைத்து ஜானர்களிலும் இசையமைத்துள்ளார்.

தந்தையை போலவே ஸ்ரீகாந்த் தேவாவும் தனக்கென்ற பாணியை உருவாக்கி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இசையால் தனது அஸ்திவாரத்தை போட்டுவிட்ட ஸ்ரீகாந்த் தேவாவின் பயணத்தில் இன்னும் எத்தனை விருதுகள் குவிய போகிறதோ..!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உங்களுக்கு பிடித்த பாடலை கமெண்ட் செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com