ஹாலிவுட்டில் சமந்தாவிற்கு பதில் தேர்வான ஸ்ருதிஹாசன்.. அவதார் பட ஹீரோவுடன் ஜோடி!

samantha sruthihasan
samantha sruthihasan

ஹாலிவுட்டில் நடிக்கவிருந்த சமந்தாவின் பட வாய்ப்பு தற்போது ஸ்ருதிஹாசன் வசம் சென்றுள்ளது.

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வரும் நிலையில் அவரின் பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஏற்கனவே சமந்தா ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாய்ப்பை சமந்தா இழந்துவிட்டார் என ரசிகர்கள் வேதனை பட்டாலும் அந்த இடத்தை தற்போது ஸ்ருதிஹாசன் நிரப்பியுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

BAFTA விருது பெற்ற இயக்குநர் பிலிப் ஜானின் சென்னை ஸ்டோரி சர்வதேச படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ருதிஹாசன் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்டோரி என்ற அந்த படத்தில் தனியார் டிடெக்டிவாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், நான் சென்னை பொண்ணு. அப்படி இருக்கும்போது சென்னையின் தனித்துவத்தை காட்டும் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது. பிலிப் ஜான் இயக்கத்தில் நடிப்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

மேலும் இந்த படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ, சாம் வொர்திங்டன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். சென்னை மற்றும் கார்டிஃபில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com