சூர்யாவின் 43வது படமான புறநானூறு படத்தின் ஒரு சிறப்பான செய்தியும், கங்குவா படத்தின் ஒரு தரமான அப்டேட்டும் வெளியாகப் போகிறது என, X தளத்தில் ரசிகர்கள் ஆக்டிவாக ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால் இது ஒரு டபுள் அப்டேட்டாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அப்டேட் வந்துக்கொண்டே இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கப்போகிறது? சூர்யா சென்ற ஆண்டு இறுதியிலேயே சுதா கொங்கராவுடன் இணைவுள்ளதாகத் தகவல் வெளியானது. சூரரைப்போற்று வெற்றிக் கூட்டணியின் அப்டேட் வெளியானதிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூடிவிட்டது.
அந்தவகையில் சென்ற ஆண்டு இறுதியிலேயே படத்தின் பெயரும் நடிகர்களும் அறிவிக்கப்பட்டன. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 43 வது படத்திற்குப் புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோரும் நடிக்கவுள்ளனர். நஸ்ரியா வெகுநாட்களுக்குப் பிறகுத் தமிழ் திரையுலகில் தலைக்காட்டவுள்ளார்.
சூர்யா தொடர்ந்து கங்குவா, வாடிவாசல் என பிஸி ஷெட்யூலில் உள்ளார். அதனால் புறநானூறு படத்தில் நடிக்க அவருக்கு நேரம் கிடைக்காமல் படக்குழு தடுமாறியதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. இதனையடுத்து ஒருவழியாக படப்பிடிப்புத் தொடங்கவுள்ளதாகத் தகவல் வந்துவிட்டது.
ஆம்! பலரும் எதிர்பார்த்த துல்கர், சூர்யா கூட்டணி மற்றும் சூர்யா, சுதா கொங்கரா, ஜீவி பிரகாஷ் கூட்டணியும் இணைந்த புறநானூறு படம் வரும் ஏப்ரல் 15ம் தேதித் தொடங்கவுள்ளது என்றச் செய்திகள் வெளியாகிவுள்ளன. இந்தப் படம் மொத்தம் 165 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது. 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, கங்குவா படத்தின் முக்கிய அப்டேட்டை விரைவில் வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதனையடுத்து புறநானூறு படத்தின் படப்பிடிப்பு தேதி இல்லாமல், வேறொரு அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சூர்யாவின் புறநானூறு படத்தின் அப்டேட் அல்லது கங்குவா அப்டேட் வெளியாகும் என்பதில் சந்தேகமேயில்லை. சூர்யா படத்தின் அப்டேட் சிங்கிள் அப்டேட்டாகவும் இருக்கலாம் அல்லது டபிள் அப்டேட்டாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் அப்டேட்டிற்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆகமொத்தம் ‘குட் பேட் அக்லி’ படத்தைப் போல இரண்டுப் படக்குழுக்களும் சொல்லாமல் கொள்ளாமல் அப்டேட்களை விடத் திட்டமிட்டது போலத்தான் தோன்றுகிறது.