

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இயக்குநர் ஜித்து மாதவனுடன் அவர் இணைந்துள்ள சூர்யா 47 திரைப்படம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் முக்கியமான அப்டேட் இன்று செப்டம்பர் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையாளத்தில் ரோமாஞ்சம், ஆவேஷம் போன்ற படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இயக்குநர் ஜித்து மாதவன், சூர்யா 47 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். சூர்யாவுடன் அவர் இணைவது தொடக்கத்திலிருந்தே திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டணியில் உருவாகும் படம் வழக்கமான சூர்யா படங்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்
சூர்யா 47 படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக, நஸ்ரியா மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதும், சூர்யாவுடன் முதல் முறையாக இணைவதும் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜித்து மாதவனின் முந்தைய படங்களின் தனித்துவமான நகைச்சுவை, இளமைத் துடிப்பு மற்றும் வித்தியாசமான கதைக்களம் இப்படத்திலும் இடம்பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் உள்ளது.
இதுவரை படத்தின் கதை குறித்த தகவல்கள் பெரிதாக வெளியிடப்படவில்லை. படக்குழுவும் முக்கிய விஷயங்களை ரகசியமாக வைத்துள்ளது. இதனால் சிறிய அப்டேட் கூட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்திய தகவலின்படி, இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பார்வை அல்லது முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பெயர் குறித்து ‘Scene’ என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், இந்த தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகலாம் என்ற தகவலும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், ரசிகர்கள் உறுதியான தகவலுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் மற்றொரு சிறப்பு, சூர்யாவின் நடிப்பையும் ஜித்து மாதவனின் இயக்க பாணியையும் ஒன்றாக பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதாகும். சூர்யா இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி அவரை எந்த வகையில் காட்சிப்படுத்தப் போகிறது என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
அதேபோல், ஆவேஷம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழில் தனது முதல் படத்தை எப்படி உருவாக்கியிருக்கிறார் என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் திறமையான கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை படத்தின் கதை குறித்த தகவல்கள் பெரிதாக வெளியிடப்படவில்லை. படக்குழுவும் முக்கிய விஷயங்களை ரகசியமாக வைத்துள்ளது. இதனால் சிறிய அப்டேட் கூட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்திய தகவலின்படி, இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பார்வை அல்லது முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பெயர் குறித்து ‘Scene’ என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், இந்த தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகலாம் என்ற தகவலும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் சூர்யா 47 படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணமும் உள்ளது.. சூர்யா தொடர்ந்து வெவ்வேறு கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அதே போல்,ஜித்து மாதவனும் தனது முந்தைய படங்களில் வழக்கமான கதை சொல்லும் முறையில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தியவர்.. எனவே இருவரின் கூட்டணி எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது..
குறிப்பாக ஜித்து மாதவனின் இயக்கத்தில் சூர்யா எந்த வகையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது..
இதுவரை வெளியான தகவல்களை வைத்து பார்க்கும் போது படத்தின் கதையைப் பற்றி யூகங்கள் பல இருந்தாலும் அதிகாரப் பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதே சரியானது..இன்று வெளியாகும் தகவல் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு விடை அளிக்குமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது..
சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.. படத்தின் இசையை சுஷின் ஷ்யாம் கவனிக்கிறார்.. சூர்யாவும் நஸ்ரியாவும் முதல்முறையாக இணைந்து நடிப்பதால் அவர்களின் திரை கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.. இதற்கிடையில் படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது..
சூர்யா மற்றும் ஜித்து மாதவன் கூட்டணி என்பதே சூர்யா 47 படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்று மாலை வெளியாகும் அப்டேட் படத்தின் கதை, தலைப்பு, கதாபாத்திரங்கள் அல்லது வெளியீட்டு தேதி குறித்த தெளிவை அளிக்குமா என்ற ஆவல் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது. அந்த அறிவிப்பு வெளியானதும், சூர்யா 47 தொடர்பான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் சூர்யா 47 படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் வெளியாகியுள்ளது.மேலும் இப்படம் தீவாளிக்கு ரிலீஸ் என்றும் அறிவித்துள்ளனர்