kantara
kantara

மலையாள ஆல்பத்திலேருந்து எடுக்கப்பட்டதா? 'காந்தாரா' பாடல் சர்ச்சை!

Published on

'கே.ஜி.எஃப்' திரைப்படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'. சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு அண்மையில் வெளியானது.

இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். காந்தாரா படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் "காந்தாரா இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம்" எனப் பாராட்டியிருந்தார்.

காந்தாரா
காந்தாரா

இப்படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்’ பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற மலையாள இசைக்குழு தங்களது சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் "இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளதால் ஒன்று போல் தோன்றலாம்" என மறுப்பு தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com