சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த கிஃப்ட் பற்றி மனம் திறந்த நடிகை தமன்னா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த கிஃப்ட் பற்றி மனம் திறந்த நடிகை தமன்னா!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா பாட்டியா, 'ஜெயிலர்' படப்பிடிப்பு முடிந்த பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த கிஃப்ட் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் தெலுங்கு ஸ்டார் சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடிக்க, இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இப்படத்தில் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக சூப்பர் ஸ்டாடர் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் அனைவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. ரஜினிகாந்த் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாக இப்படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தமன்னாவுக்கு ஒரு கிஃப்ட் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை தமன்னா, சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், 'நான் மிகச்சிறந்த நடிகரான சூப்பர் ஸடாருடன் பணிபுரியும் வாய்ப்பை பெற்றதை மிகப்பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவருடன் பணியாற்றவேண்டும் என்ற என் கனவு இப்போது நனவானது. அவருடன் 'ஜெயிலர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் கழித்த தருணங்களை அவ்வப்போது நினைத்து ரசிப்பேன். அதுமட்டுமல்லாமல், ஆன்மிகப் பயணத்திற்கான ஒரு புத்தகத்தை அவர் எனக்கு பரிசாக அளித்தார். அது அவரைப் பற்றிய நல்ல சிந்தனையாகவே இருந்தது. அதில் அவர் கையெழுத்துகூட போட்டிருந்தார். என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com