தமன்னாவுக்கு விரைவில் டும் டும் டும்.. அவரே சொன்ன தகவல்!

தமன்னா
தமன்னா

பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை தமன்னா, இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், தற்போது அவர் பிரபல நடிகருடன் காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை தமன்னாவின் திருமண அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் நடித்து அசத்தி வருபவர் நடிகை தமன்னா. சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இவர் நடனமாடிய காவாலா பாடல் பட்டி தொட்டி எல்லாம் ட்ரெண்ட் ஆனது. தமிழ் சினிமாவில் ‘கேடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான தமன்னாவுக்கு முதல் படம் கைகொடுக்காவிட்டாலும் அடுத்தடுத்து படங்கள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

நடிகை தமன்னா, 33 வயதைக் கடந்தும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நிலையில், திருமணம் குறித்த கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டும் வருகின்றன. சில நேரங்களில் கிசுகிசுக்களும் கிளம்ப, அதற்கு மறுப்பு தெரிவித்தும் வந்தார்.

இந்த நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடிக்கும் போது நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்த தம்மன்னா , சில நாட்களுக்கு பிறகு இருவருமே தங்களின் காதலை உறுதி செய்தனர். தொடர்ந்து தற்போது இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தநிலையில் அதற்கு பதில் கூறியுள்ளார் நடிகரும் தமன்னாவின் காதலருமான விஜய் வர்மா.

விஜய் வர்மாவிடம் சமூக வலைதளத்தில் ரசிகை ஒருவர் ‘தமன்னாவுடனான திருமணம் எப்போது’ என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ’வீட்டில் அம்மா கேட்கும் கேள்வியை ரசிகையும் கேட்க ஆரம்பித்துவிட்டார். எங்களது திருமணம் ஹைதராபாத்தில் நடக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் இருவரின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com