”டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாத” இந்த பாடலின் இசையமைப்பாளர் சந்திரபோஸை தெரியுமா?

Chandrabose music director
Chandrabose music director

ந்த மார்கழி மாதத்தில் "பொய்யின்றி மெய்யோடு " என தொடங்கும் ஐய்யப்ப பக்தி பாடல் பல இடங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த புகழ் பெற்ற பாடலுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். படம் சுவாமி ஐயப்பன்.

சுமார் 300 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர் சந்திரபோஸ் ஆர்எஸ் மனோகரின் நாடகங்களுக்கு ஆரம்ப காலங்களில் இசை அமைத்தார். தேவாவுடன் இணைந்து சில படங்களுக்கு இசை அமைத்தார்.1977 ல் வெளியான மதுர கீதம் படம் இவர் இசை அமைத்த முதல் படமாகும்.1980 முதல் 1990 வரை மிக அதிகமான படங்களுக்கு இசை அமைத்தார் சந்திரபோஸ். இவரின் இசையில் சிறிது மேடை நாடக தன்மை உள்ளது என குறை சொன்னவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

நாடக பின்புலத்தில் இருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் பல ஜனரஞ்சகமான பாடல்களை கம்போஸ் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுட்டார்  போஸ். காதல், கொண்டாட்டம், சோகம் என பல உணர்வுகளை சிறப்பாக இசையில் சொன்னவர்.1987 ல் வெளியான சங்கர் குரு படத்தில் இடம் பெறும் ”காக்கி சட்டை போட்ட மச்சான்” பாடல் தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட் பாடலாக உள்ளது.

ரஜினி நடித்து சந்திரபோஸ் இசையில் வெளிவந்த மனிதன், ”ராஜா சின்ன ரோஜா” படப் பாடல்கள் அனைத்துமே ஹிட் என்று சொல்லலாம் விடுதலை படத்தில் வரும் நீலகுயில்கள் இரண்டு பாடல் சிறந்த காதல் பாடலாக இன்றும் விரும்பப்படுகிறது.1988 ஆம் வருடம் மிக அதிகமான படங்களுக்கு இசை அமைத்தார் சந்திரபோஸ்.

1988 ல் வெளியான அண்ணா நகர் முதல் தெரு படத்தில் வரும் அனைத்து பாடல்கள், கதாநாயகன் படத்தில் பூ பூத்த தை, மக்கள் என் பக்கம் படத்தில் வரும் ஆண்டவன பார்க்கணும், பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் இடம் பெறும் ”டெல்லிக்கு ராஜானாலும்”இப்படி பல பாடல்களை 1988 ல் ஹிட் பாடலாக தந்தவர் சந்திரபோஸ்.

1989 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான புதிய பாதை  வெற்றி பெற கதையுடன் சேர்த்து சந்திரபோஸ் இசையும் ஒரு காரணம்.1991 விஜயகாந்த்  நடிப்பில்  வெளியான மாநகர காவல் படத்தில் இடம் பெறும் 'இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை' பாடல் விஜய்காந்த் ரசிகர்களால் விரும்பப்படும் பாடலாக உள்ளது. பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் சிறந்த இசையை தந்தார் சந்திரபோஸ்.1980 களின் மினிமம் கியாரண்டி பட இசை அமைப்பாளராக இருந்தவர் போஸ். கடந்த 2010 ஆண்டு சந்திர போஸ் மறைந்தார். மறைந்தாலும் தனது பாடல்களால் தமிழ் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சந்திரபோஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com