அறிந்தும் அறியாமலும் ‘குட்டி‘யின் பெரிய சாதனைகள்! ஆர்யாவின் சாதனைப் பயணம்!

#HBActorArya
ActorArya
ActorArya
Published on

டிப்பு, நகைச்சுவை, சைக்கிள் விளையாட்டி சாதனை மற்றும் ஹோட்டல் பிஸ்னஸ் என பன்முக திறமையாளராக விளங்கிவரும் நடிகர் ஆர்யா இன்று (டிசம்பர் 11) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி, ஆர்யாவின் ரசிகர்கள் எக்ஸ் தளர்தில் #Arya என ட்ரெண்டு செய்துவருகிறார்கள்.

ஆர்யா 1980ம் ஆண்டு கேரளாவில் பிறந்து பின் சென்னையில் தனது இன்ஜினியர் படிப்பை முடித்தார். பின்னர் மாடலிங் மேல் ஆசை வந்து மாடலிங்கிற்குள் நுழைந்த ஆர்யா 2005ம் ஆண்டு நடிப்பிலும் இறங்கினார். 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் ’குட்டி’ என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் பிராகாஷ் ராஜின் மகனாக நடித்த இவர் பீலிம் ஃபேர் மற்றும் தென்னிந்திய சினிமா விருதுகளில் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதைப் பெற்றார். அதன்மூலம் மக்களுக்கு ஆர்யாவின் முகம் வெளியே தெரிய வந்தது.

தனது முதல் படமே ஆர்யாவின் பயணத்துக்கு உதவி செய்தது. அதே ஆண்டு’ உள்ளம் கேட்குமே’ என்ற ஆர்யாவின் படம் வெளியானது. இப்படத்தில் ஷ்யாம் மற்றும் லைலா ஹீரோ ஹீரோயினாக நடித்தார்கள். இதுவும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பை பெற்றது. பின் ‘ஒரு கல்லூரியின் கதை’ என்ற படமும் அதே ஆண்டு வெளியானது.

அடுத்த ஆண்டின் முதல் படமான கலாப காதலன் என்ற படத்தில் தனது காதல் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார், ஆர்யா. இப்படம் சரியான வசூலை பெற்றுதரவில்லை என்றாலும் இன்றும் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப் படுகிறது. பின் அதே ஆண்டு பட்டியல், வட்டாரம் ஆகிய படங்களும் 2007ம் ஆண்டு மாய கண்ணாடி, ஓரம் போ ஆகிய படங்களும் வெளியாகின.

பிறகு 2009ம் ஆண்டு வெளியான நான் கடவுள் படத்தின் மூலம் தான் ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த நடிகர் என்பதை நிரூபித்தார், ஆர்யா. ஆம்! இப்படத்தில் அவரின் நடிப்பு மக்களை மட்டும் அல்ல சினிமாத் துறையில் உள்ள அனைவரையுமே கவர்ந்தது. ஒரு அகோரியாக நடித்த ஆர்யா பல கடினமான யோகாக்களைக் கற்றார். இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்து ஒரு அகோரியாகவே வாழ்ந்தார்.

பின் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் கேமியோ ரோல் வந்து அனைவருக்குமே எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார், ஆர்யா. 2010ம் ஆண்டு வருடு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தடம் பதித்தார். அதே ஆண்டு தமிழில் வெளியான மதராசப்பட்டினம் ஆர்யாவுக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.

ஆர்யா நடித்த படங்களில் பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவுங்க படங்களில் சந்தானம் உடன் நடித்து ஒரு குடும்ப படத்தைக் கொடுத்தார். அதன் மூலம் குழந்தைகளையும், குடும்ப ரசிகர்களையும் தன் வசமாக்கினார். பின்னர் அவரின் ஓவ்வொரு படமும் ரசிகர்களின் இதயங்களை அவர் வசமாக்கின. சார்பாட்டா பரம்பரை, மகாமுனி, காப்பான், Bangalore naatkal, கடம்பன், இஞ்சி இடி பழகி, ஆகிய படங்கள் அவரின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்கட்டாகன படங்கள் .ஆர்யா கஜினிகாந்த் படத்தின் மூலம் சாயிஷாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

ஆர்யா சினிமாவில் மட்டுமல்ல சைக்கிளிங் செய்வதிலும் ஆர்வமாக இருந்தார். வெறும் 27 நிமிடங்களில் 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய முதல் சினிமா நடிகர் இவரே. அதேபோல் லண்டனில் 1540 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் செல்லும் ஒரு போட்டியிலும் வென்றார். ஆர்யா தனது உடலை சைக்ளிங் செய்வதன் மூலம் பராமரித்து வருகிறார் என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

ஆர்யாவுக்கு நிறைய படங்கள் தோல்வியும் கொடுத்தன. ஆனால் அதற்கெல்லாம் அசராமல் நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் உழைத்து வருகிறார் என்பது உண்மையே. சினிமாவிலும் சைக்கிளிங்கிலும் மாறி மாறி பல விருதுகள் வாங்கி சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் ஆர்யா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com