கதாநாயகியாகும் போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் மகள்!

டிஜிபி சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால்
டிஜிபி சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால்

மிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டாடா. கவின் நடிப்பில் வெளியான இந்த படத்தை இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அனைவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன. அப்படிதான் இயக்குனர் கணேஷ் கே. பாபுவிற்கும் அடுத்த படம் கிடைத்தது. இந்த படத்தில் துருவ் விக்ரம் நடிகராக நடிப்பதாக கூறப்பட்டது.

அதன் பின் அது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த படம் கைவிடப்பட்டதா அல்லது தொடருமா என்று கூட இயக்குனர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில், இதற்கு முன்பாக ஒரு படத்தை இயக்கிவிடலாம் என திட்டம் போட்ட இயக்குனர் கணேஷ் கே.பாபு ஒரு கதையை முடிவு செய்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் தொடங்கவிருக்கும் இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், டிஜிபி சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் அறிமுக நாயகியாக களமிறங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் தவ்தி ஜிவால் ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சினிமா துறையில் ஹீரோயினாக கால்பதிக்க தொடர்ந்து ஆர்வம்காட்டி வருபவர் தவ்தி ஜிவால் என தெரியவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com