தளபதி விஜய் அண்ணா...வாழ்த்துகள் சொன்ன உதயநிதி ஸ்டாலின்!

Udhaya nidhi with Actor Vijay
Udhaya nidhi with Actor Vijay
Updated on

லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த உடனே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜயை அண்ணா என்று கூறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ அக்டோபர் 19 நாளை திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படம் பற்றிய பேச்சு எழுந்தது முதல் ஆதரவாகவும், எதிராகவும் என்று பல்வேறு விதமான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களை கூறி நிகழ்ச்சிக்கான பணிகள் தொடங்கும் முன்பே நிறுத்தப்பட்டது. இதற்கு பின்னால் மாநில விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இருக்கிறார் என்ற சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

அதே நேரம் தமிழ்நாடு அரசின் சார்பில் லியோ படத்திற்கு ஆதரவான நிலைபாடே எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் அரசாணையில் தளபதி விஜய் என்று குறிப்பிட்டே செய்தி வெளியானது.இந்த நிலையில் லியோ திரைப்படத்தினுடைய சிறப்பு காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்துவிட்டு எக்ஸ் தளத்தில் தளபதி விஜய் அண்ணா என்று குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.

அமைச்சர் உதயநிதி பதிவில் கூறியுள்ளது, தளபதி விஜய் அண்ணாவின் லியோ தரம். லோகேஷ் கனகராஜின் சிறப்பான உருவாக்கம். அன்பறிவு மாஸ்டர் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோக்கு பாராட்டுக்கள். படக் குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com