தமிழ் திரைப்பட புரொடியூசர் ஆகிறார் எம்.எஸ்.தோனி!

M.S.தோனி
M.S.தோனி

லகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.எஸ்.தோனி. சமீபத்தில் ஐ.பி.எல். தவிர, அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து, ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிறுவனம் தமிழில் மட்டுமின்றி; அனைத்து இந்திய மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சமுள்ள திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளது. இதற்கான பலகட்ட தயாரிப்புப் பணிகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளைஅடிப்படையாகக் கொண்டு பிரபலமான, ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்புத் துறையில் தனக்கென தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. ‘வுமன்ஸ் டே அவுட்’ என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றையும் இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எம்.எஸ்.தோனிக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பே தமிழ் படம்தானாம். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு குடும்பப் பொழுதுபோக்கு படமாகத் தயாராகும் இந்தப் படைப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை, ‘அதர்வா தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல். மேலும், இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றி விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

மிழில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் அறிவியல் புனைவு கதை, குற்றவியல், நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தைக் கொண்ட திரைப்படங்களை எடுக்க பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான தமிழ் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி கூறுகையில், ‘சாக்ஷி தோனி எழுதிய இந்தக் கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணர முடிந்தது. இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com