தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன'!

தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன'!
Published on

“'அழகி'க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருத்திருக்கும் இந்தப் படம், என் படங்களில் இன்னொரு மைல் கல்” என்று தமது 'கருமேகங்கள் கலைகின்றன' படம் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.

மேலும் படத்தைப் பற்றிக் கூறுகையில், ''பல்வேறு மனிதர்களின் மனங்களில் மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும். இந்தப் படம் அவை பற்றியும் உறவுகளின் சிக்கல்கள் குறித்தும்

பேசுகிறது. என்னுடைய சிறுகதையை ஒன்றைத் தழுவித்தான் எடுக்கிறேன். ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்துவிடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா? இதை நமக்கு நாமே கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம்.

அழகிக்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் வீரசக்தி தமிழ்ப் பற்றுதல் உள்ள ஒரு சிறந்த தயாரிப்பாளர். எந்த நெருக்கடியும் தராமல் இந்தப் படத்தை எடுத்து வருகிறார். ஆதலால், என் உயிரையும் உணர்வையும் எரிபொருளாய்ப் போட்டுப் படத்தை உருவாக்கி வருகிறேன்.

இந்தப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் நடித்திருக்கின்றனர்.

ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு வேலை பார்க்கும் யோகி பாபு இந்தக் கதையைச் சொன்னதும் 'வந்துடுறேன் ஐயா'னு சொன்னார். அதன்படியே வந்து நடித்துக் கொடுத்தார். அவரை நகைச்சுவை நடிகர்ன்னு மட்டும் சொல்லிட முடியாது.

கௌதம் மேனன், இதுவரை செய்யாத அளவு கச்சிதமாக நடித்தார்.

எஸ்.ஏ.சியின் அனுபவமும் இதில் பேசுகிறது.

மம்தா மோகன்தாஸ் தான் முக்கியமான கண்மணிங்கிற பொண்ணா வருது. நந்திதா தாஸ்க்கு பக்கத்தில் வர்ற கேரக்டர். இங்கேயிருந்து இணையத்தில் முகம் பார்த்துக் கதை சொன்னேன். அப்போதிருந்து மம்தா கேரக்டரில் வாழ ஆரம்பித்து விட்டது. 'எப்ப ஷுட்டிங்?'னு கேட்டுட்டே இருக்கு.

"கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன" இன்ற என் சிறு கதை, இப்போது "கருமேகங்கள் கலைகின்றன" என்று உருவாகிறது.

வெகு நாட்களுக்குப் பிறகு லெனின் இப்படத்துக்கு எடிட் பண்றார்.

ஜீ.வி பிரகாஷ் உடன் வேலை பார்த்ததில்லை. தேசிய விருது வாங்கினாலும் சாதாரணமாக வந்து நிறைவாக பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com