இந்த பிரபல OTT யிலா வரப் போகிறது 'டாடா' திரைப்படம்?

டாடா திரைப்படம்
டாடா திரைப்படம்

பிக்பாஸ் புகழ் கவின், அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்திருக்கும் படம் டாடா. இந்த திரைப்படம் தற்போது ஒரு பிரபல OTT தளத்தில் வெளியாக உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரிப்பில் ‘டாடா’ படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார். கவின் மற்றும் அபர்ணா தாஸூடன் K.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ், பிரதீப் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் சில கடந்த வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது . இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்தப் டாடா திரைப்படம் தற்போது பிரபல OTT தளத்தில் வரப் போகிறது.

இந்தப் படம் பல தரப்பு ரசிகர்களும் கவர்ந்து பெரும்' வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து ஒரு ஃபீல் குட் படம் பார்த்த உணர்வு வருகிறது என ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். டாடா படம் வெளியாகி கவினுக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்திருக்கிறது எனலாம்.

கடந்த ஒன்பதாம் தேதி தியேட்டரில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் அதிக வசூல் பெற்ற படத்தில் டாடா முதலிடத்தில் உள்ளது. சிறிய பட்ஜெட் படத்தில் நடிகர் கவின் நடித்து ரெட்ஜெய்ன்ஸ் நிறுவனத்தால் இந்த படம் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்தது. இதன் காரணமாக படத்தின் வசூல் தமிழக முழுவதும் 12 கோடி ரூபாயை பெற்றுள்ளது.

இந்த டாடா திரைப்படம் தற்போது ஒரு பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் தளத்தில் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com