ரசிகர்களின் பேவரைட்டான சோட்டா பீம்... பெரிய பட்ஜெட்டில் படமாக உருவாகிறது... வைரலாகும் டீசர்!

chhota bheem
chhota bheemImg credit: chhota bheem

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கார்ட்டூன்களில் சோட்டா பீமும் ஒன்று. அதில் வரும் கதாபாத்திரங்களாக நண்பர்களுக்குள் பெயர் சூட்டி விளையாடுவதும் உண்டு. அப்படி பலரையும் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்த சோட்டா பீம் பெரிய படமாக உருவாகிறது.

கார்டூன் என்றாலே நம் நினைவுக்கு வருவது டோரா புஜ்ஜி, மோடு பத்லு, டாம் அண்ட் ஜெர்ரி, சோட்டா பீம் தான். டோலக்பூர் என்ற கற்பனையான ஊரில் வாழும் இந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகளாகும்.

சமீபத்தில் கூட, நிறைய இளைஞர்கள் வயதானவர்களின் டோலக்பூருக்கு எப்படி செல்வது என கேட்டு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அந்த அளவிற்கு சோட்டா பீம் பலரது வாழ்க்கையில் ஊடுறுவியுள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
AK 63: நடிகர் அஜித்தின் 63 வது திரைபடத்திற்கான அப்டேட்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
chhota bheem

தற்போது இந்த கற்பனை கதை படமாக உருவாகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இதில் உள்ள கதாபாத்திரங்கள் காண்பிக்கப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை பார்க்க ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

சோட்டா பீம் என்றாலே லட்டு தான் நினைவுக்கு வரும். அப்படி கார்டூனில் பார்த்து ரசித்த அனைத்தும் இந்த படத்திலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com