#NijamMovie
#NijamMovie

தெலுங்கு படங்களின் முதல் நாளுக்கான நிஜாம் வசூல் ரிப்போர்ட் வெளியீடு!

தெலுங்கு படங்களின் முதல்நாள் வசூல் ரிப்போர்ட் வெளியானது. இந்த பட்டியலில் பிரபாஸின் ஆறு படங்கள் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா முழுவதும் வெளியாகி ஹிட் கொடுக்கும் படங்களை எப்படி Pan India திரைப்படங்கள் என்று சொல்கிறோமோ, அதேபோல் தெலுங்கானா, மகாராஷ்ராவின் பாதி பகுதி மற்றும் கர்நாடகாவின் பாதி பகுதியில் ஹிட் கொடுக்கும் தெலுங்கு படங்களை நிஜாம் என்று கூறுவார்கள்.

பாகுபலி முதல் பாகத்திற்கு பின்னர் உலகளவில் தெலுங்கு படங்கள் சிறப்பு அங்கீகாரங்களைப் பெற்றது. முன்பெல்லாம் தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளை மாஸ் என்ற பெயரில் மிகவும் பில்டப் கொடுத்து

படங்கள் எடுத்தது ஒரு மீம் பொருளாக மாற்றியது. ஆனால் அதன்பின்னர் அந்த ஆக்ஷனையே தன் பலமாக மாற்றிய தெலுங்கு சினிமா உச்சத்திற்கு சென்றது. தெலுங்கு சினிமா பிரம்மாண்டமாக மாறத்தொடங்கி தொடர் வெற்றி படங்களைக் கொடுத்தது. அந்தவகையில் நிஜாம் ரிப்போர்ட்டின்படி முதல் நாள் அதிமாக வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்களின் பட்டியல் வெளியானது.

இந்த பட்டியலில் 17 படங்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக ராம் சரன் மற்றும் ஜூனியர் என்டிஅர் நடித்த RRR திரைப்படம். இது நிஜாம் பகுதிகளில் முதல் நாள் மட்டும் மொத்தம் 23.35 கோடி வசூல் செய்தது. இரண்டாவது இடத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படம் 22.55 கோடி வசூல் செய்தது. மூன்றாவது இடத்தில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படம் 13. 68 கோடி வசூலை ஈட்டியது. அதன்பின்னர் சர்க்காரு வரி பாட 12.24

கோடியும், பீம்லா நாயக் 11.85 கோடியும், புஷ்பா முதல் பாகம் 11.44 கோடியும், பிரபாஸின் ராதே ஷியாம் திரைப்படம் 10.80 கோடியும் வசூல் செய்தது. எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்திலும் பிரபாஸின் சகோ மற்றும் பாகுபலி பாகம் இரண்டு ஆகிய படங்கள் 9.41 கோடி மற்றும் 8.75 கோடியும் வசூல் செய்தன. அடுத்த ஏழு இடத்தில் வக்கீல் சாப் (8.75 கோடி), சாரிலேரு நீக்கெவ்வாரு ( 8.67 கோடி), ப்ரோ தி அவதார் (8.45 கோடி), சைரா நரசிம்ம ரெட்டி ( 8.10 கோடி), ஆச்சர்யா ( 7.90 கோடி), தசரா (6.78 கோடி), பாகுபாலி பாகம் 1 ( 6.32 கோடி) ஆகிய படங்கள் உள்ளன.

இந்த பட்டியலில் பிரபாஸ் நடித்த ஆறு படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஆதிபுருஷ் படம் பல சிக்கல்களுக்கு இடையே வெளியாகியும் நாஜிமின் முதல் நாள் வசூல் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்ததால் X தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com