LadySuper Nayanthra
LadySuper Nayanthra

#HBDNayanthara:லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சந்தித்த மிகப்பெரிய 10 சர்ச்சைகள் என்னதெரியுமா?

நயன்தாரா இன்று தமிழ்நாடு மட்டுமல்லாது தேசிய அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படும் நாயகி. 1984ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிறந்த நயன்தாரா இன்று தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, இந்த இடத்தை எட்டி பிடிப்பதற்கு முன்பாக, சினிமா துறையில் அவரைச் சுற்றிவந்த, பல சர்ச்சைகளில் இருந்து மீண்டு, அதே திரைத்துறையில் தன்னுடைய நடிப்பாலும், விடா முயற்சியாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டதே, அவரின் தற்போதையை அசுர வளர்ச்சிக்கு அடித்தளம் எனலாம். நயன்தாராவின் இந்த கடின உழைப்பே, அவரை, தமிழ் திரையுலக சிம்மாசனத்தில் உச்ச நட்சத்திரமாக அமரவைத்துள்ளது. ஆண்களே கோலோச்சும் திரைத்துறையில், நயன்தாராவின் இருப்பு என்பது, தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முன்னனி நாயகர்களுக்கு அளிக்கப்படும், முக்கியத்துவத்தை விட, ஒருபடி மேலான இடத்திற்கு நயன்தாராவை நகர்த்தியுள்ளது. இந்த இருபது ஆண்டுகால காலகட்டத்தில் நயன்தாரா எதிர்கொண்ட மிகப்பெரிய 10 சர்ச்சைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

1. நயன்தாரா சிம்பு 

Nayanthara simbu
Nayanthara simbu

ல்லவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, நிஜ வாழ்விலும் சிம்புவுடன் ஜோடியாக வலம்வரத் தொடங்கினார். ஆனால், Playboy சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. சிம்பு, நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட பர்சனல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தர்மசங்கடத்தை உருவாக்கியது.

ஆனால் அப்போதுதான் தன்னுடைய கேரியரில் வெற்றிகளை கண்ட நயன்தாராவுக்கு, இணையத்தில் வெளியான புகைப்படங்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்தின. அந்தநேரத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான தலைமகன், ஈ போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப்பெறவில்லை. குறிப்பாக, ஈ படத்தில் கிளப் டான்சராக வித்தியாசமான ரோலில் நடித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் நயன் எதிர்கொண்ட பிரச்சனைகள் அவரை, நம்பர்-1 ஹீரோயின் ரேசில் இருந்து பின்னுக்கு தள்ளியது.

2. ’பில்லா’ நயன்தாரா

Nayanthra in Billa
Nayanthra in Billa

ஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஸ்லிம்மான, கட்டுக்கோப்பான உடலமைப்புடன் பில்லா படத்தில் தோன்றிய நயன்தாரா, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பில்லா படத்தில் நயன்தாராவின் இன்டேரா காட்சியில், High Heelsவுடன், கார் மேல் ஏறி நடந்துவரும் நயன்தாரா, இனி திரையுலகில் எந்த பிரச்சனை வந்தாலும், அதனை சமாளிக்க தயார் என்பது போல கம்பீரமாக காட்சி அளித்தார்.

3. ஓ... தேவா... தேவா...

Prabhu Deva and Nayanthra
Prabhu Deva and Nayanthra

2009ல் பிரபுதேவா இயக்கத்தில், விஜய், நயன்தாரா கூட்டணியில் வில்லு படம் வெளியானது.  படத்தின் உருவாக்கத்தின் போது, பிரவுதேவா, நயன்தாரா இடையே காதல் உருவானதாக பேசப்பட்டது. மேலும் தங்களுக்கிடையே உள்ள நெருங்கிய நட்பை வெளிப்படுத்தும் விதமாக, நயன்தாரா தன்னுடைய கையில் பிரவுதேவாவின் முதல் எழுத்தை பச்சை குத்தியிருந்தார். ஆனால், இந்த நட்பு நீண்டகாலம் நீடிக்கவில்லை. இதனால் திரைத்துறையில் இருந்து 11 மாதங்களில் விலகியிருந்தார் நயன்தாரா.

4. ஜெயம் தந்த ஸ்ரீ ராம ராஜ்யம்!

nayanthara  sri rama rajyam
nayanthara sri rama rajyam

2011ம் ஆண்டு, தெலுங்கில் ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் நயன்தாரா சீதா கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவரைச் சுற்றி எழுந்த பிரச்சினை காரணமாகவும், எதிர்ப்பு எழுந்தது. ஆனால், படத்தின் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா, நயன்தாராவுக்கு உறுதுணையாக இருந்தார். இந்நிலையில், 2011 நவம்பர் 17ல் வெளியான ஸ்ரீ ராம ராஜ்யம் படம், சூப்பர் டூப்பர் ஹீட் படமாக வெற்றிப்பெற்றது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆந்திரா அரசின் மிக உயரிய விருதான, நந்தி விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

5. மாஸான ரீ என்ட்ரி கொடுத்த நயன்!

Nayanthra in Aram
Nayanthra in Aram

யன்தாரா  காதல்களில் தோற்று ஊடகங்களின் வெளிச்சத்தில் படாமல் இருந்த, நயன்தாரா இந்தகால கட்டத்தில் முழுமையாக மாறியிருந்தார். பிரச்சனைகளை நேராக எதிர்கொள்ள தொடங்கினார். தமிழுக்கு RE ENTRY கொடுத்த நயன்தாரா, தன்னுடைய நடிப்பிலும், ஊடகங்களை கையாள்வதிலும் முதிர்ச்சி அடைந்திருந்தார். நயன்தாராவின் இந்த புதிய மாற்றத்திற்கு காரணம், தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த சறுக்கல்களும் பிரச்சனைகளுமே. இதனை அடுத்து Heroin Based படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

6. காதம்பரியை கைபிடித்த காதலன்!

Nayanthra Vignesh Shivan
Nayanthra Vignesh Shivan

’நானும் ரவுடிதான்’ படம், நயன்தாராவின் திரை வாழ்விலும் சரி தனிப்பட்ட வாழ்விலும் சரி முக்கிய படமாக அமைந்தது. காதம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயன்தாரா, அப்படத்தின்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் காதலியாக மாறினார் நயன்தாரா. இந்நிலையில் நடிகர் சிம்புவுடன், இது நம்ப ஆளு படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இதன்மூலம் தன்னுடைய PERSONAL விஷயங்களையும், தொழிலையும் தனித்தனியாக, நயன்தாராவால் கையாளமுடியும் என்பதை நிரூபித்துக்காட்டினார்.

7. யாருகிட்ட!

Nayanthra in jawan
Nayanthra in jawan

மிழ் சினிமாவின் பெண் சிங்கமாக உள்ள நயன்தாராவை, சீண்டினால் அவர் சும்மா விடமாட்டார் என்பதற்கு உதாரணம் நடிகர் ராதாரவி. நயன்தாரா நடிப்பில் 2019ல் வெளியான கொலையுதிர் காலம் திரைப்பட Promotion விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்துகளை பேசிய ராதாரவி, அதன்பின்னர் அரசியல் ரீதியாகவும் சமூகத்திலும் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.

பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்காக ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல் அவரின் கருத்துக்கு அவரின் தங்கையும், நடிகையுமான ராதிகாவும் கண்டனம் தெரிவித்திருந்தார். நயன்தாராவுக்கு ஆதரவாக, தென்னிந்திய நடிகர் சங்கமும், ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதன்பின்னர், நயன்தாரா குறித்து, தான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தன்னுடைய கருத்து நயன்தாராவை காயப்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார் ராதாரவி.

8. டும்..டும்..டும்..!

Nayanthra Vignesh Shivan Marriage
Nayanthra Vignesh Shivan Marriage

பல நாட்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி, 2022 ஜூன் 9ம் தேதி சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 

9. ஊரே பார்த்த திருமணம்!

nayanthara marriage
nayanthara marriageassets.vogue.in

நயன்தாரா திருமணம் குறித்த வீடியோ ஒன்றும் மறுபுறம் trendஆகிக் கொண்டிருந்தது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு மிகப்பெரிய தொகைக்கு netflix ott நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அது முழுக்க முழுக்க நயன்தாராவை மையமாக வைத்தே உருவானது. இதில் நெட்பிளிக்ஸ் சில கொடுக்கல்,வாங்கல் விஷயங்கள் பேசுப்பொருளானது.

10. நயன்தாராவின் உயிர், உலகம்!

Nayanthra family pic
Nayanthra family pic

ஜூன் மாதம் திருமணம் முடிந்த நிலையில் 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர் நயன்தாரா,விக்னேஷ் சிவன் தம்பதி. இந்த விஷயத்தில் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல சிக்கல்களை எதிர்கொண்டார் நயன்தாரா. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்ரீதியாகவும் பல சிக்கல்களையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்ட நயன்தாரா, தான் நினைத்த விஷயத்தை நடத்தி முடிப்பதில் என்றும் லேடி சூப்பர்ஸ்டார்தான்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com