தல தோனியின் 'Let's Get Married'

தல தோனியின் 'Let's Get Married'

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மகேந்திர சிங் தோனிக்கென்று தமிழ்நாட்டில் மிக பெரிய ரசிக கூட்டமே உண்டு .

கிரிக்கெட் ஒருபுறம் இருக்க மகேந்திர சிங் தோனி தற்போது கோலிவுட்டில் படம் தயாரிக்க முடிவெடுத்து 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து இருந்தார்.

தற்போது அந்த நிறுவனத்தின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை அறிவித்து உள்ளார்கள். தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ ( Let's Get Married) என்ற திரைப்படத்தின் தொடக்க விழா, சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மகேந்திர சிங் தோனியின் மனைவியான சாக்ஷியும் கலந்து கொண்டார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் 'லவ் டுடே' படத்தில் நடித்த இவானா ஆகியோர் தான் இதில் ஜோடியாக நடிக்கிறார்கள். லெட்ஸ் கெட் மேரீட் (Let's Get Married) என இந்த படத்திற்கு பெயர் சூட்டி உள்ளார்கள். இப்படத்திற்கு விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இப்பட விழாவில் சாக்ஷி பேசுகையில், “நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கே இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராக இருக்கிறோம்.” என்றார்.

ரமேஷ் தமிழ்மணி இயக்கும் படத்தில் யோகி பாபுவும் நதியாவும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். தல தோனியின் ரசிகர்கள் படம் வெளியாகும் தேதி குறித்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விளையாட்டில் பட்டையை கிளப்பிய தல தோணி சினிமா துறையிலும் தனது சிறப்பான தடத்தினை பதிப்பாரா? பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com