33 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மெகா ஸ்டார்கள்!

அமிதாப்பச்சன் - ரஜினிகாந்த்
அமிதாப்பச்சன் - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் 170வது திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதை நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வருகிறார். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சனும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமிதாபச்சனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், 33 வருடங்களுக்கு பிறகு ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில், என்னுடைய வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் இணைகிறேன். என்னுடைய மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

ரஜினியின் 170 வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ரித்திகா சிங், நடிகை மஞ்சுவாரியர், நடிகை துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் படத்தில் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவுக்கு பதிலளித்த நடிகர் அமிதாப்பச்சன், நீங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை ரஜினி என்றும் 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைவர், the leader, the head, the cheif ரஜினிகாந்தின் 170வது படத்தில் இணைவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com