

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர்- 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது அடுத்தக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் கௌரவ வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது , பின்னர் அந்தத் திட்டத்திலிருந்து அவர் வெளியேறியதால், அவருக்கு பதில் மிதுன் சக்கரவர்த்தி அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
ஜெயிலர் - 2 படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தமான பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதால் , அவர் அடுத்த கட்டமாக
`தலைவர் 173' படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கமலும் ரஜினிகாந்த்தும் இணைந்து நடிக்கும் ஒரு திரைப்படம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் , அதற்கு முன்னர் திரைப்படத்தை முடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக சிம்ரன் அல்லது ஷோபனாவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடிகர் கமலஹாசனை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டுள்ளது. படத்தில் நடிக்க வேண்டிய முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
தலைவர் 173 திரைப்படத்தின் வில்லனாக ஒரு புதிய முகத்தை நடிக்க வைக்கவும் இயக்குனர் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அனேகமாக வில்லன் கதாபாத்திரத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் ஷங்கர் , S.A. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது அவரது திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார். ஆனாலும், அவர் தோன்றிய திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை , அவரும் அப்போது பிரபலமாகாத நபராக இருந்தார். பெரிய இயக்குனராக உருவாகிய பின்னர் ஷங்கர் தன் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் தோன்றுவார்.
காதலன் , சிவாஜி , எந்திரன் , நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஷங்கர் தோன்றியுள்ளார். எந்தக் காட்சியிலும் வசனம் பேசி நடிக்காத ஷங்கர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. தற்போது தலைவர் 173 படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தியை மாற்றி விட்டு, அவருக்கு பதிலாக டியூட் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவை இயக்குனராக அறிவிக்கலாம், என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஒருவேளை சிபி சக்கரவர்த்தியே இயக்குனராக நீடிக்கும் பட்சத்தில், அவரது திட்டப்படி ஷங்கர் வில்லனாக நடிக்கலாம். ஆனாலும் ஷங்கர் வில்லனாக நடிப்பதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள், தயாரிப்பு நிறுவனம் சார்பிலும், ஷங்கர் சார்பிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.