வீடியோ : முதல் தமிழ் நடிகராக, நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் விளம்பர பலகையில் தளபதி விஜய்!

வீடியோ : முதல் தமிழ் நடிகராக, நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் விளம்பர பலகையில் தளபதி விஜய்!

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள NASDAQ இன் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகளில் விஜய் படங்களின் சில போஸ்டர்கள் அடங்கிய வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தளபதி விஜய் தனது பிறந்தநாளை ஜூன் 22 ஆம் தேதி கொண்டாட உள்ளார். ஒவ்வொரு வருடமும், அவரது ரசிகர்களும் தளபதி பிறந்தநாளில் தங்கள் பங்களிப்பாக புதுமையாக பல விஷயங்களை செய்து அசத்தி அவர்களது அன்பை வெளிப்படுத்தி வருவதுபோல், தற்போது கனடாவில் உள்ள ரசிகர்கள் ஒரு டாப் விஷயத்தை அரங்கேற்றி உள்ளனர்.

கனடா விஜய் மக்கள் இயக்கம், தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 அன்று வருவதை முன்னிட்டு, அதற்கு முன்பாக, மதிப்புமிக்க நியூயார்க் டைம்ஸ் சதுக்க விளம்பர பலகையில் நடிகர் விஜய் போஸ்டர்களை இடம்பெறச் செய்துள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதையடுத்து, சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது.

தளபதி விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்று எண்ணியதையடுத்து, முதல்முறையாக நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் தோன்றிய முதல் தமிழ் நடிகராக விஜய் மாறியுள்ளார்.

இந்த வீடியோவில், 'தெறி', 'சர்கார்', 'மாஸ்டர்', 'பீஸ்ட்' படங்களின் போஸ்டருடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ :

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com