16 ஆண்டுகள் பிறகு மீண்டும் குத்து பாடலுக்கு நடனமாடிய ஜேசன் சஞ்சய்..!

jason sanjay directs new film
jason sanjay directs new film
Published on

ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.அவரின் வாரிசாக திரைக்களத்தில் சிக்மா (Sigma) படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கும் அவர் மகன் ஜேசன் சஞ்சய் இப்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறார்.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு விமானநிலையத்தில் (airport) Jason Sanjay-வின் வீடியோ வெளியானது. அதில் அவர் காட்டிய நடத்தை, உடை , காட்டிய மரியாதை போன்றவைகள் அவரது தந்தையை நினைவூட்டின என்ற கருத்துக்கள் வைரலானது. தொடர்ந்து ரசிகர்கள் சிலர் அவரை “இளைய தளபதி” (“Ilaya Thalapathy”) என்றும் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

ஜேஸன் தனது ஆரம்ப கல்வியை American International School Chennai (AISC, Chennai)-வில் முடித்த பின் Ruerson / Toronto Film School-ல் திரைப்படம் – தயாரிப்பு (film production) பற்றிய படிப்பையும் தொடர்ந்து BA (Hons) in Screenwriting course-ஐ லண்டனில் (London) முடித்த பிறகே திரைத்துறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆகவே விஜய் மகனாக மட்டுமின்றி “நடிப்பு” (acting) மட்டும் அல்ல, “திரைக்கதை , திரைக்கலை ,இயக்கம் ,தயாரிப்பு ஆகியவற்றில் திட்டமிட்ட பயிற்சி மற்றும் கல்வி பெற்றவர் என்பதால் ஜேசன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிக்மா திரைப் படம் ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்ற காரணத்தினால் லைகா நிறுவனமும் பட ப்ரோமோஷனில் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. Sigma ஒரு ஆக்‌ஷன், அட்வேஞ்சர் உடன் காமெடி கலந்த திரைப்படமாக அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்கிறது பட நிறுவனம்.

இப்படத்தின் ஷூட்டிங் 65 நாட்கள் சென்னை, சேலம், தலாக்கோணா, தாய்லாந்து ஆகியவற்றில் படமாக்கப்பட்டதாகவும் 2025 நவம்பரில் படப்பிடிப்பு 95 % முடிவடைந்துள்ளதாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது post-production நிலைக்கு செல்லும் திட்டத்தில் இருக்கிறது; அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நிறைவு பெற்று ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய் கலகலப்பு 2 புகழ் கேத்ரினா தெரசாவுடன் இணைந்து ஆடும் குத்தாட்ட நடனம் இடம்பெற போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இதற்கு முன் Jason Sanjay 2009-இல், தனது தந்தையின் திரைப்படமான வேட்டைக்காரன் (Vettaikaaran) –இல் “நான் அடிச்சா…” (“Naan Adicha”) பாடலில் நடனம் ஆடி மக்களின் கவனம் பெற்றார். அதே போல் தற்போது இந்த குத்தாட்ட நடனத்தை மக்கள் ரசிக்கிறார்களா என்பதை அறிந்து அதன் பின் நடிகர் அவதாரம் எடுப்பார் என்ற கருத்துகளும் வலம் வருகிறது.

இதையும் படியுங்கள்:
19 நிமிட அந்தரங்க வீடியோ : இதைப் பகிர்ந்தால் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை..!
jason sanjay directs new film

ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மகன் Aryan Khan நடிகை தமன்னா (Tamannaah)-வுடன் The Bads of Bollywood (OTT தொடர்ல் குத்தாட்டம் போட்டது தற்போது இதனுடன் ஒப்பிடப்படுகிறது.

தற்போது மார்க்கெட்டில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் முதலில் இயக்குனராகவே அறிமுகமாகி வெற்றி பெற்று அதன் பின் நடிகரானார். அவரைப் போலவே ஜேசன் சஞ்சயும் விரைவில் ஹீரோவாக நடிப்பார் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு. அடுத்த வருடம் ( 2026) தந்தை நடித்த கடைசிப் படமும் மகன் இயக்கிய முதல் படமும் வெளிவந்து ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
பயந்தா பிரியாணி... எதிர்த்தா காலி! அந்த கோமாளியை கொல்ல இதுதான் ஒரே வழி!
jason sanjay directs new film

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com