நேரில் சந்தித்த தளபதிகள்: விஜய்யை சந்தித்த விஷால் மற்றும் 'மார்க் ஆண்டனி' படக்குழு!

நேரில் சந்தித்த தளபதிகள்: விஜய்யை சந்தித்த விஷால் மற்றும்  'மார்க் ஆண்டனி' படக்குழு!
ராகவ்குமார்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ நடிக்கும் படத்தின் டீசரை வேறொரு ஹீரோ பார்த்து படம் வெற்றி பெற வாழ்த்துவது அரிது. ஆனால் விஜய்க்கு இந்த இலக்கணங்கள் பொருந்தாது. தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்று அழைக்கப்படும் விஜய் புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் விஷால் நடிக்கும் படத்தின் டீசரை  நேரில் சென்றுபார்த்து  வாழ்த்தியுள்ளார்.

நடிகர் விஷால் அவர்கள் நடிப்பில் உருவாகிவரும் “மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 06:30 மணிக்கு வெளிவருகிறது.இந்த டீசரை  விஜய் அவர்களுக்கு  மார்க் ஆண்டனி குழு காண்பிக்க விரும்பியது. இதற்காக விஷால் விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.விஜய் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

புரட்சி தளபதி விஷால் - தளபதி விஜய் சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் கண்டு மகிழுந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷால் அவர்களிடம் "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தளபதி விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார். 

அதன் பின் தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை "துப்பறிவாளன் 2" மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம் கூறிய விஷால் அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக நடிகர் விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்" என்று விஜய் கூறி மேலும் உற்சாக படுத்தினர். சினிமாவில் இது போன்ற ஆரோக்கியமான நட்பும் நண்பர்களுக்கும் இருப்பது அபூர்வமானது. வாழ்க  திரை தளபதிகள்.

logo
Kalki Online
kalkionline.com