'தளபதி 67' படத்தின் மாஸ் தகவல் வெளியானது! விஜய் வேற லெவல்!

'தளபதி 67' படத்தின் மாஸ் தகவல் வெளியானது! விஜய் வேற லெவல்!

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.

எந்தவொரு விசேஷ தினமானாலும் சரி, அப்போது தளபதி விஜய் படம் ரிலீஸ் என்றால் அந்த தினம் ரசிகர்களுக்கு இரண்டு மடங்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். அந்தளவுக்கு விஜய்யின் நடனமானாலும் சரி, நடிப்பு, ஸ்டைல் என எதிலும் குறையில்லாத அளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்து விடுவார்.

சமீபத்தில் 'வாரிசு' திரைப்படம் பொங்கலன்று வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றாலும்கூட, வசூலைப் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றிப்படமாகவே மாறிவருகிறது.

இந்நிலையில், தளபதி விஜய் அடுத்த படத்திற்கான வேலைகளில் படுபிஸியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் ஏற்கெனவே நடித்து வெளியான 'மாஸ்டர்' படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு, அடுத்து லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் லோகேஷின் அடுத்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், விஜய், லோகேஷ் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் வேற லெவலை எட்டியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில், 'தளபதி 67'-ல் விஜய் ஐம்பது வயது கேங்ஸ்டராக நடிக்க இருப்பதோடு, இப்படம் முழுவதும் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் இருக்கும் எனவும் தகவல் வந்தன. அதேபோல் 'தளபதி 67' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என தகவல் வருகின்ற நிலையில், விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com