
தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய வட்டார அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன.இப்போது இந்த லிஸ்டில் சேர்ந்து உள்ளது.தண்டட்டி. தண்டட்டி என்பது தென் மாவட்டங்களில் பெண்கள் அணியும் ஆபரணமாகும். இயல்பாக இருக்கும் காதுகளை கீழ் நோக்கி இழுத்து வளர்ப்பார்கள்.வளர்ந்த காதில் தங்க ஆபரணங்களை அணிவார்கள். இந்த வழக்கம் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் உள்ளது. இப்போது தண்டட்டி அணியும் அப்பத் தாக்களை (பாட்டிகள் )காண்பது அரிதிலும் அரிதான விஷயமாக உள்ளது. மறைந்து வரும் தண்டட்டி பழக்கத்தை மையப்படுத்தி தண்டட்டி என்ற படத்தை இயக்கி உள்ளார் அறிமுக இயக்குனர் ராம் சங்கையா.
இப்படத்தில் காணாமல் போன தண்டட்டியை தேடும் போலீஸ் ஏட்டையாவாக நடித்துள்ளார் பசுபதி.பல காட்சிகளில் பிணமாக நடித்துளார் ரோஹிணி. உசிலம்பட்டி பகுதியில் படமாக்க பட்ட இப்படத்தில் தண்டட்டி அணிந்த பதினைந்து அப்பத்தாக்களை நடிக்க வைத்துள்ளார் டைரக்டர்.நடிக்க வைத்ததோடு நின்று விடாமல் இந்த அப்பத்தாக்களை நேற்று சென்னையில் நடந்த தண்டட்டி படத்தின் இசை வெளியிட்டு விழாவுக்கு அழைத்து வந்து கௌரவப் படுத்தி உள்ளார்கள் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும்.
இப்படத்தை லக்ஷ்மன் குமார் தயாரித்து உள்ளார். " தொழில் முறை நடிகர்களை வைத்து வேலை வாங்குவது கூட சுலபம். ஆனால் இந்த அப்பத் தாக்களை வைத்து வேலை வாங்குவது கடினம்.நான் திட்டினால் குழந்தை போல கோபித்து கொள்வார்கள். மறுபடியும் அரவணைத்து அன்பாக பேசி நடிக்க வைப்பேன் என்றார்" இயக்குனர்.நடிகர் பசுபதி "இது நகைச்சுவை கலந்த யதார்த்தமான படம். நாம் சரியாக நடிக்கவில்லை என்றால் ஸ்பாட்டிலேயே கமெண்ட் தருவார்கள் இந்த அப்பத்தாக்கள் என்றார். இந்த நிகழ்வில் ஒவ்வொருவர் பேசும் போதும் குலவை சத்தம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் இந்த அப்பத்தாக்கள்.