'பிகினிங்' இன்னமும் சிறப்பாக தொடங்கி இருக்கலாம்!

திரை விமர்சனம் !
'பிகினிங்' இன்னமும் சிறப்பாக தொடங்கி இருக்கலாம்!
Published on

பிளவு திரை (split screen ) என்ற புதிய கான்செப்ட்டில் உருவாகி உள்ள திரைப்படம் பிகினிங். வினோத் கிஷான் மற்றும் கௌரி கிஷான் நடித்திருக்கிறாகள். ஜெகன் விஜயா இந்த படத்தை இயக்கி உள்ளார். ஒரு சிலர் சேர்ந்து ஒரு இளம் பெண்ணை (கௌரி )கடத்தி விடுகிறார்கள். அந்த பெண் அங்கே உள்ள ஒரு பழைய மொபைல் போனை எடுத்து பல எண்களுக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்து முடியாமல் போகிறது.

ஒரு கட்டத்தில் ஒரு இளைஞனுக்கு (வினோத் ) தொடர்பு கிடைக்கிறது.அந்த இளைஞனோ பேசுவதிலும், புரிந்து கொள்வதிலும் சிறிது குறைபாடு உடையவன். இந்த இளைஞனிடம் சொல்லி இந்த பெண் புரியவைத்து தப்பித்தாளா என்பது தான் கதை. சாதாரண கதையிலேயே சொல்ல முடிந்த கதையை ஏன் பிளவு திரை என்ற ஐடியாவில் இயக்குனர் எடுத்தார் என்று தெரியவில்லை.கதை ஓட்டத்தில் சிறிய குறைபாடு மட்டும் இல்லை.மிக பெரிய ஓட்டையையே வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு சிறிய வீட்டில் ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைக்கபட்ட பெண் கத்தி பேசும் போது, பெண்ணை அடைத்து வைத்த கிரிமினல்களுக்கு கேட்காமலா இருக்கும். சுவாரசியமாக செல்ல வேண்டிய கதையில் எந்த வித ட்விஸ்ட்டும் இல்லாமல் நகர்கிறது. வினோத் நன்றாக நடிக்கிறார் என்று சொல்வதை விட சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்று சொல்லாம்.

கௌரி படபடப்பு கோபம், பாலியல் துன்புறுத்தல், காதலன் கை விடும் போது காட்டும் ஒரு ஏக்கம் என சிறப்பாக செய்துள்ளார். எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இப்போது சில இளைஞர்கள் புதுமையாக செய்கிறோம் என்ற பெயரில் கதையில் கவன குறைவாக இருந்து விடுகிறார்கள். உலக சினிமாக்களில் புதுமை என கொண்டாடப் படுவது எல்லாமே கதை திரைக்கதையில் பிரமாதப்படுத்திய படங்கள்தான் என்பதை இன்றைய இளம் இயக்குனர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிகினிங் இன்னமும் சிறப்பாக தொடங்கி இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com