வட சென்னை 2 படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் இல்லை…

Vadachennai
Vadachennai
Published on

ரசிகர்களின் ஃபேவரெட் படமான வடசென்னை படத்தின் பாகம் 2வை இயக்கப்போவது வெற்றிமாறன் இல்லை என்றும், அதேபோல், தனுஷ் அதில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன. தனுஷிற்கு பதிலாக தற்போது இந்த பிரபலம்தான் நடிக்கவுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் தரமான படங்களைக் கொடுத்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் வெற்றிமாறன். அவருடைய ஒவ்வொரு படத்தின் முதல் அப்டேட் வெளியாகும்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிடும். வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. சூரி ஹீரோவாக நடித்த இப்படத்தில், விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் படபிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில்கூட வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்பு ஆரம்பிக்கதான் திட்டமிட்டு வருகிறோம் என்று கூறினார். இந்த நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் அது வேறு ஒரு புதிய படம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலாக நடித்த படம் பொல்லாதவன். இந்தப்  படம் இன்றளவும் இளைஞர்களுக்குப்  பிடித்த படம். இந்த வெற்றியைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்கள் சேர்ந்து பணியாற்றினர். ஆடுகளம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்படம் நான்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது.

அடுத்ததாக இருவரும் வடசென்னை படத்தில் இணைந்தனர். இதற்கடுத்து தனுஷ் வைத்து அசுரன் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இந்த நான்கு படங்களுமே ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

வடசென்னை 1 படத்தின் முடிவில் வட சென்னை 2 வரும் என்று ரசிகர்கள் பார்த்ததிலிருந்தே எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வெகுநாட்களாக போகும் இடமெல்லாம், கேட்டு வந்தனர். ஆனால், வெற்றிமாறன் தள்ளிப்போட்டே வந்தார்.

இப்படியான நேரத்தில் வட சென்னை பாகம் 2ஐ வெற்றிமாறன் உதவி இயக்குனரான கார்த்திகேயன் இயக்க போவதாகவும், வெற்றிமாறன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அதேபோல், தனுஷ் நடிக்கவில்லையாம். மணிகண்டன் நடிக்கிறாராம். எப்படியும் இது அன்பு கதாபாத்திரமாக இருக்காது. அவருக்கு சரிசமமான வேறு கதாபாத்திரத்தின் அறிமுகமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை தொடக் கூடாதா? முத்தமிடக் கூடாதா?
Vadachennai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com