ஊமைப் படம் முதல் உலகப்படம் வரை...! தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி!

ஊமைப் படம் முதல் உலகப்படம் வரை...! தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி!

ஹாலிவுட் படங்கள் பெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும்போதுதான் இந்திய சினிமா மாற்றத்திற்கான முயற்சிகளை செய்துக்கொண்டிருந்தது. எப்போதும் சிலர் ஹாலிவுட் படங்களின் தரத்தையும் இந்திய படங்களையும் ஒப்பீட்டு பார்த்தே கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மை என்ன? அயல்நாட்டுக்காரர்கள் 1947 வரை நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

அவர்கள் சினிமா வளர்ச்சியில் ஈடுப்பட்டிருக்கும்போது, நாம் அடிமையாக இருந்தோம். அவர்கள் நம் நாட்டை விட்டு சென்று நூறு வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் நாம் சினிமா துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகிறோம். அப்படியென்றால் அயல் நாட்டினர்கள் மட்டும் நம் நாட்டை அடிமைப்படுத்தி வைக்கவில்லை என்றால் இந்நேரம் எத்தனை சாதனைகளையும் தரமான படங்களையும் உருவாக்கியிருப்போம்.

தென்னிந்திய சினிமா என்பது கோலிவுட் (தமிழ் சினிமா), டோலிவுட் (தெலுங்கு சினிமா), மோலிவுட் (மலையாள சினிமா),சாண்டல்வுட் ( கன்னட சினிமா) ஆகியவை ஒன்றிணைந்ததுதான். முன்பெல்லாம் இந்திய சினிமா என்றால் அது பாலிவுட் தான் என்று கூறுவார்கள். ஆனால் காலங்கள் செல்ல செல்ல தென்னிந்திய சினிமாவும் உச்சத்தைத் தொட ஆரம்பித்தது.

முதன்முறையாக 1900ம் ஆண்டுகளில் தான் சென்னையில் ஊமைப் படத்திற்கான தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்பட்டது. 1918ம் ஆண்டு ஆர். நடராஜ முதலியார் இயக்கிய கீசகவதம் என்ற படம் தான் தென்னிந்திய சினிமாவின் உதயம் ஆகும். பின்னர் அக்டோபர் 31ம் தேதி 1931ம் ஆண்டு காளிதாஸ் என்ற படம்தான் தென்னிந்தியாவின் முதல் பேசும் படமாகும்.

கீசகவதம் படம்
கீசகவதம் படம்

அதன் பின்னர் ஏழு மாதங்கள் கழித்து ‘அலாம் அரா’ என்ற பேசும் மோஷன் படம் வெளியானது. அந்த காலக்கட்டங்களில் பிரபல தென்னிந்திய இயக்குனர்களாக இருந்தது, ரகுபதி வெங்கைய்யா நாயுடு, தாதா சாஹிப் டோர்ன், நடராஜா முதலியார் ஆகியோர்தான்.

மக்கள் படங்களை ஆச்சர்யமாக பார்த்தது போய் உணர்வுப்பூர்வமாக பார்க்க ஆரம்பித்தக் காலம் 1950 முதல் 1960ம் ஆண்டு காலக்கட்டத்தில்தான். S.S. வாசன், கே. பாலச்சந்தர், கே.விஷ்வநாதன், பி.நாகி ரெட்டி ஆகியோர்கள் சினிமாவில் புதிய அலைகள் எழ காரணமானார்கள். குறிப்பாக கே.பாலச்சந்தரின் படங்கள் மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் இருந்தன.

இயக்குனர்களின் கதைகளுக்கு உயிர் கொடுப்பது நடிகர்கள்தான். அதுவரை நடிகர்கள் பெயர்களைக் கூட அறியாத மக்கள், 1950 களிலிருந்து நடிகர்களைப் போற்ற ஆரம்பித்தார்கள். N.T. ராமா ராவ், சிவாஜி கனேசன், எம்.ஜி.ஆர், ரவிக்குமார், ஜெமினி கனேசன் ஆகியோர் தன் நடிப்பின் மூலம் மக்களை அழவும் வைத்தனர் சிரிக்கவும் வைத்தனர்.

சினிமாவின் அடுத்த வளர்ச்சி கதைகளை வகைகளாகப் பிரித்ததுதான். ஆம்! உறவுக்கான படம், குடும்ப படம், ஆக்ஷன் படம், காதல் படம், பேய் படம், த்ரில்லர் படம் போன்ற 12 வகைகள் உள்ளன. சில இயக்குனர் சில வகை கதைகளில் தான் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அதாவது இருக்கிறார்கள் என்றும் கூறலாம். ஆம்! 1990 களிலிருந்து இன்று வரை சினிமா துறையில் ஏராளமான வளர்ச்சிகளைக் காணலாம்.

படத்தொகுப்பில், கேமராவில், லென்ஸில், கதையில், திரைக்கதையில் தினம் தினம் ஏராளமான வளர்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. தென்னிந்திய சினிமாவை புறட்டிப்போட்ட படைப்புகளின் தொடக்கம்தான் நாயகன், குற்றம் கடிதல், தேவர்மகன், தெய்வ மகன், ஹே ராம், குருதிப்புனல், ஆளவந்தான் போன்ற படங்கள்.

d28wu8o6itv89t.cloudfront.net

ஊமைப் படத்திலிருந்து சர்வதேச அளவில் போற்றப்படும் ஒன்றாக மாறியுள்ளது தென்னிந்திய சினிமா. பாகுபாலி, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் சர்வதேச அளவில் நல்ல வசூலைப் பெற்ற படங்களாகின. அதேபோல் பேரன்பு, ஈகா, ஆகிய படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு சிறப்பு வாய்ந்த படங்களாக அறிவிக்கப்பட்டன. விசாரனை, ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற படங்களும் உலகளவில் ரசிகர்களைப் பெற்ற படங்களாகும். அதேபோல் தென்னிந்திய படங்களின் நடனங்களும் உலக மக்களை கவர்ந்துவருகிறது என்றும் கூறலாம்.

சினிமாட்டிக் யுனிவர்ஸ் இப்போது அடுத்த வளர்ச்சிக்கு வேர் ஊன்றி இருக்கிறது. கைதி, ரோலக்ஷ், பார்திபன் என ஒரு கற்பனை உலகத்தையே படைத்திருக்கிறார் லோகேஷ். இன்னும் சொல்லப் போனால் லோகேஷுக்கு முன்னர் பாரதிராஜாவே இந்த யுனிவர்ஸ் வகையை உருவாக்கியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் ஸ்ரீ தேவி( மயில்) கமல் ஹாசனுக்காக( சப்பாணி) எத்தனை நாள் வேண்டுமென்றாலும் காத்திருப்பேன் என்று கூறியவாரு படம் முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை படத்தில் காண்பித்திருக்க மாட்டார்கள். பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு மொய் வைக்கும் காட்சி வரும். அந்த காட்சியில் மயில் மற்றும் சப்பாணி மல்லிகை கடைக்காரர்கள் இரண்டுரூபாய் மொய் வைத்ததாக குறிப்பிட்டிருப்பார்கள். இதிலிருந்து என்னத் தெரிகிறது? சப்பாணியும் மயிலும் நல்லப்படியாக சேர்ந்து விட்டார்கள், ஒரு மல்லிகைக் கடையும் வைத்திருக்கிறார்கள், இரண்டு ரூபாய் மொய் வைக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள் என்பதை காண்பித்திருப்பார், பாரதிராஜா

90 களிலேயே தென்னிந்திய சினிமா வளர்ச்சியடைந்து விட்டது. ஆனால் இப்போதுதான் தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி உலகளவு தெரிகிறது என்பதே உண்மை.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com