கமல் அலுவலகத்தில் நடந்த முக்கிய சந்திப்பு! 'KH 233' மாஸ் அப்டேட்!

கமல் அலுவலகத்தில் நடந்த முக்கிய சந்திப்பு! 'KH 233' மாஸ் அப்டேட்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படமான 'KH 233' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும் நிலையில், உலக நாயகன், இயக்குநர் வினோத் இருவரும் நேற்று இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் தலைமையிலான குழுவினருடன் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தி உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இவருடன் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்கா, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இதைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்ல் 'KH 233' படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்களுடன் கமல் மற்றும் வினோத் தீவிர கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதை இப்போது வெளியாகியுள்ள படங்கள் உறுதி செய்கிறது.

இதைப் பார்க்கும்போது, 'KH 233' படத்தின் கரு சமூக கருத்தை சொல்லும ரீதியாகவும், ஒரு பெரிய விவசாயப் பிரச்சினையை மையப்படுத்தியும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் வினோத் கமலிடம் இருந்து வெறும் 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மற்ற நடிக நடிகைகள், படக்குழு விவரங்கள் பற்றிய கூடுதல் செய்திகளை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com