நடிகை ஷோபனா வீட்டில் திருடிய பணிப்பெண்.. மன்னித்து மீண்டும் வேலை கொடுத்த நடிகை!

நடிகை ஷோபனா
நடிகை ஷோபனா

டிகை ஷோபனா வீட்டில் பணம் திருடிய பணிப்பெண் சிக்கிய நிலையில் திருடியதை ஒப்புக்கொண்டதால் அவரை மன்னித்து மீண்டும் பணியாற்ற நடிகை ஷோபனா அனுமதித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தளபதி, பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஷோபனா. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இவரது வீட்டில் விஜயா என்ற பெண், ஓராண்டாக பணிப்பெண்ணாக இருந்து ஷோபனாவின் தாயாரை கவனித்து வந்தார். இதனிடையே வீட்டில் பணம் சிறுக சிறுக காணாமல் போனதால் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீஸார் விசாரித்ததில் பணிப்பெண் விஜயா, வறுமையின் காரணமாக  சிறுக சிறுக 41ஆயிரம் ரூபாய் வரை பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் நடிகை ஷோபனா தனது புகாரை வாபஸ் பெற்றார்.

அத்துடன் அவரை மன்னித்து வீட்டில் தொடர்ந்து பணி செய்ய ஒப்புக்கொண்ட அவர், திருடிய பணத்தை சம்பள பணத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com