மீண்டும் மருத்துவமனையில் சமந்தா? தீயாய் பரவிய வதந்தி மறுத்த மேனேஜர்!

samantha
samantha

சமந்தாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக அவர் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சமந்தாவின் மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக இவர் ஆடிய கிளாமர் நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இருந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அவரின் லேட்டஸ்ட் படமான யசோதா வசூலில் முன்னணி நடிகர்களையே ஆச்சர்யத்தில் தள்ளியது.

சமந்தா
சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். அதற்கு திரைத்துறை பிரபலங்கள் பலர் ஆறுதல் சேதியினை பகிர்ந்து வந்தனர். அதன் பிறகு சற்று குணமாகியிருந்த சமந்தா நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அவரது மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். சமந்தா அவரது வீட்டில் நலமுடன் உள்ளதாகவும், உடல்நலப்பிரச்னை என வெளியான தகவல் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ சமந்தா நலமாக இருக்கிறார் என்கிற செய்தியால் சமந்தா ரசிகர்கள் நிம்மதியடைகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com