'தி நட்டி புரொஃபஸர்' ஹாலிவுட் படப்புகழ் நடிகை ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் மரணம்!

'தி நட்டி புரொஃபஸர்' ஹாலிவுட் படப்புகழ் நடிகை ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் மரணம்!
Published on

ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ், எல்விஸ் பிரெஸ்லியுடன் “கேர்ள்ஸ்! கேர்ள்ஸ்! கேர்ள்ஸ்!” மற்றும் ஜெர்ரி லூயிஸுடன் "தி நட்டி ப்ரொஃபசர்" மற்றும் பேரழிவு திரைப்படமான "தி போஸிடான் அட்வென்ச்சர்" ஆகிய திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான ஹாலிவுட் நடிகைகளில் ஒருவர்.அவருக்கு வயது 84. வயோதிகம் தொடர்பான நோய்க்குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் இறந்தார். முன்னதாக அவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மகன் ஆண்ட்ரூ ஸ்டீவன்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“கேர்ள்ஸ்! கேர்ள்ஸ்! கேர்ள்ஸ்!” (1962) மிகவும் பொதுவான எல்விஸ் படங்களில் ஒன்றாக இருந்தது- அதில் ஸ்டெல்லா ஸ்டீவன்ஸின் நடிப்புத் திறமை பெரிதாக வெளிப்பட வாய்ப்புகள் ஏதும் பெரிதாக இல்லாமல் போனது வாஸ்தவமே! ஆனால் 1963 ல் வெளிவந்த "தி கோர்ட்ஷிப் ஆஃப் எடி'ஸ் ஃபாதர்," கதையில் க்ளென் ஃபோர்டு மற்றும் ஷெர்லி ஜோன்ஸ் கூட்டணியில் ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் தனது வெரைட்டியான நடிப்பை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தி இருப்பார். நகைச்சுவையைப் பிரதானமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் ஸ்டெல்லா மொண்டானாவில் இருந்து வந்த புத்திசாலித்தனமான ஆனால் பொம்மை போலிருக்கும் நீதியை நிலைநாட்டும் ஐடியல் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றார்.

"1963 ல் வெளிவந்த “தி நட்டி ப்ரொஃபசர்" மட்டுமல்ல வேறு எந்த ஜெர்ரி லூயிஸ் திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும், நாயகி ஒரு செட் பிராபர்ட்டி போலத்தான் பயன்படுத்தப்பட்டிருப்பார். நாயகியின் திறமையைப் பாராட்டிப் பேசும் அளவுக்கு ஜெர்ரி லூயிஸ் திரைப்படங்களில் அவர்களுக்குப் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் விட்டு வைக்கப்படமாட்டாத நிலை தான் நீடித்தது. ஆனால் ’நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அத்திரைப்படத்தில் ஸ்டெல்லா ஸ்டீவன்ஸின் நடிப்பை அத்திரைப்படத்தில் வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இதுவும் நகைச்சுவைத் திரைப்படம் தான். கல்லூரி வேதியியல் ஆய்வகத்தில் ஒரு வித்யாசமான ரசாயனக் கலவையைத் தயாரிக்கும் கல்லூரி வேதியியல் பேராசிரியர் ஒருவர். அவர் தன் குண்டான தோற்றத்தால் கேலிக்கு உள்ளாகி இருப்பார். அந்தக் கேலியால் திடீரென்று ஒருநாள் தூண்டப்பட்டு தான் தயாரித்த எடை குறைப்பு கலவையை குடித்து உடனடியாக மிகப்பெரிய எடை இழப்பை சந்தித்து தான் நேசிக்கும் பெண்ணிடம் வேறொரு நபர் போல நடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார். இந்தக் கதையை எத்தனைக்கெத்தனை நகைச்சுவை கொட்டி நடிக்க முடியுமோ அத்தனை சாதுர்யமாக நடித்திருப்பார் ஸ்டீவன்ஸ்.

1966 ல் வெளிவந்த "தி சைலன்சர்ஸ்", மாட் ஹெல்ம் ஃபிலிம் சீரிஸின் ஸ்பை ஸ்பூஃப்களில் முதன்மையானது, இத்தகைய படங்களுக்கென 2010 ல்

வெளியிடப்பட்ட , ஒரு விமர்சனத்தில் வாட்ச்சிங் தி டிடெக்டிவ்ஸ் இணையதளம் கூறியது குறிப்பிடத்தக்கது, டீன் மார்ட்டின் திரைப்படங்களில் வரும் பூனை கூட மிகச்சிறப்பான நடிப்புத் திறனை வழங்கி விடுவது வழக்கம். போலவே இதில் ஸ்டெல்லா ஸ்டீவன்ஸின் பம்பில் பீ தனமான அதாவது குழப்பமானதொரு சூழலில் படு நகைச்சுவையான முகபாவங்களையும் உடல்மொழிகளையும் வெளிப்படுத்தி நடித்து அவர் திரை முழுதையும் ஆக்ரமித்து விட்டார் இத்திரைப்படத்தில் என்று அந்த இணையதளம் கருத்துத் தெரிவித்திருந்தது.

இவரது மகனும் ஒரு நடிகரே அவரது பெயர் ஆண்ட்ரூ ஸ்டீவன்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com