ஆதிபுருஷ் படத்தின் வெளியிட்டால் தள்ளிபேபோன சிறு பட்ஜெட் தமிழ் படம்!
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களுக்கும், பெரிய ஹீரோ நடிக்கும் படங்களையும்தான் தியேட்டர்கள் வாங்கி வெளியிட விரும்புகின்றன. மிக பெரிய ஓபனிங் தான் காரணம். இப்போது பிற மொழி படங்களும் வர ஆரம்பித்து விட்டன. பாகுபலி, RRR, கே.ஜி.எப் படங்களின் வரவேற்பே இதற்கு சாட்சி.
இன்று ஜூன் 16 ஆம் தேதி வெளியாக வேண்டிய நாயாடி திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைக்க வில்லை. காரணம் பெரும்பான்மையான தியேட்டர்களில் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படம் வெளியாவதே. மீதம் இருக்கும் சில தியேட்டர்களிலும் ராதா மோகன் இயக்கிய பொம்மை படம் வெளியாக்கிறது.
நேற்று நாயாடி படத்தின் பத்திரிகையாளர் திரையிடலில் பேசிய இப்படத் தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம் "இந்த படம் என் வாழ்நாள் கனவு. நான் ஆஸ்திரேலியாவில் ட்ரெயின் ஓட்டி சம்பாதித்த பணத்தை இதில் முதலீடு செய்திருக்கிறேன். படத்திற்கு விளம்பரம் செய்து ரிலீஸ் தேதி அறிவித்த பிறகு தியேட்டர் இல்லை என்கிறார்கள். ஒரு தெலுங்கு படத்திற்காக என் படத்தை நிறுத்தி விட்டார்கள். இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று வருத்தத்துடன் பேசினார். இதற்கு என்ன தீர்வு சிறு பட்ஜெட் தமிழ் படங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எதிர் காலம் என்ன? அரசு தலையிட்டு சிறு தமிழ் படங்கள் எதிர் காலத்திற்கு வழி செய்ய வேண்டும் என்பதே சிறு பட்ஜெட் படங்களை இயக்கும் குழுவினரின் கோரிக்கையாக உள்ளது.