சித்தி சீரியலில் சிவக்குமாருக்கு ஏற்பட்ட அவமானம்... தன்னையே செருப்பால் அடித்துக்கொண்டு செய்த சபதம்!

Sivakumar
Sivakumar
Published on

நடிகர் சிவக்குமார் வெள்ளித்திரையில் நடித்த அளவிற்கு, சின்னத்திரையில் அதிகம் நடிக்காததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. ஆம்! அதன்பின்னர் அவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திற்கும் கும்புடுப் போட்டுவிட்டாராம்.

தமிழ் சினிமாவின் அப்போதைய முன்னணி நடிகர் சிவக்குமார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் இருந்த காலத்தில் இளம் நடிகராகவும், அவர்கள் திரைத்துறையிலிருந்து மெல்ல விலகும் நேரத்தில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர் சிவக்குமார். சிவக்குமார் முதன்முதலில் சிவாஜியின் ஓவியத்தை வரைந்து அவரிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறார். அதன்பின்னரே சிவாஜி திரைப்படங்களுக்கு ஓவியம் வரையும் மோகன் ஆர்ட்ஸ் என்ற வரை கலைப்பயிலகத்தில் சேர்த்துவிட்டார்.

அங்குதான் அவரின் பயணம் ஆரம்பித்தது. பின்னர் 'காக்கும் கரங்கள்' என்ற படத்தில் அறிமுகமாகி, பின்னர் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தென்தமிழகத்தின் மார்கண்டேயன் என்று புகழப்பட்டார். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பட்ட நாடகங்களிலும் நடித்தார். இவர் நடித்த எத்தனை மனிதர்கள், கையளவு மனசு சீரியல்கள் தூர்தர்ஷனில் மெஹா ஹிட் ஆனது.

ஹீரோவாக நடித்து பின், குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், பின்னர் முழு வேலையாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக தந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போது ஒருமுறை சித்தி நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது, சிவாஜி போன்று தனது நடிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக கதாபாத்திரத்தை ஆத்மார்த்தமாக உணர்ந்து அழும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு நடிகை அதைப் பார்த்து சிரித்துவிட்டாராம்.

இதையும் படியுங்கள்:
ஓவியத்தில் Phd பட்டம் பெற்ற ஒரே நடிகர்… இவர்தான் இரட்டை இலை சின்னத்தையும் வடிவமைத்தார்!
Sivakumar

இது சிவக்குமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே, தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்டு இனி நடிக்கவே மாட்டேன் என்று சபதம் எடுத்தாராம். அப்போது ஒப்புக்கொண்டு சைன் போட்டவற்றில் மட்டும் நடித்துவிட்டு, தனது திரைப்பயணத்திற்கு மொத்தமாக ஒரு End Card போட்டுவிட்டாராம்.

வெள்ளித்திரையில் விட சின்னத்திரையில் அதிகம் பணம் சம்பாரித்த சிவக்குமார், மரியாதை இல்லாத இடத்தில் ஒரு கணம் கூட இருக்க முடியாமல், இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com