அப்போ ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன்… ஆனால் இப்போ!! – ஷாருக் கான்!

Sharu Rukh Khan
Sharu Rukh Khan
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

நவம்பர் 2ம் தேதி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். அந்தவகையில் தற்போது அவர் ரசிகர்களிடம் என்ன பேசினார் என்ற செய்திகள் வந்துள்ளன.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய சினிமாவின் ஒரு முக்கிய அங்கமாவார். இவருக்கு இந்தியா முழுவதுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாஸ் படங்கள் கொடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் இவர், கோலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் கடைசியாக ஜவான் படத்தில் நடித்தார். இந்தப் படம் 1000 கோடி வசூல் செய்தது. இதனையடுத்து இவரின் துன்கி படம் வெளியானது.

இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும். சென்ற ஆண்டு மட்டும் ஷாருக்கான் மூன்றுப் படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தார். பதான், ஜவான் மற்றும் துன்கி ஆகிய படங்கள் நல்ல வசூலை ஈட்டியது. அந்தவகையில் இந்த மூன்றுப் படங்களும் ரூ 2600 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப் படைத்தது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் 2ம் தேதி தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த நாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடிய அவர் தான் ஒரு நல்ல செய்தி வைத்திருப்பதாக அவர் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், “ஒரு நல்ல விஷயம் இருக்கிறது, நான் இனி புகைபிடிக்க மாட்டேன். புகைபிடிப்பதைக் கைவிட்ட பிறகு மூச்சுத்திணறல் குறைவாக இருக்கும், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்படாது என்று நினைத்தேன், ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. கடவுள் அருளால் அதுவும் சரியாகிவிடும்." என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
நடிகர் மாதவன் பின்பற்றும் மூன்று விதிகள் இவைதான்!
Sharu Rukh Khan

சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனது சிகரெட் பழக்கத்தைப் பற்றி பேசினார். அதாவது, “ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன். சாப்பிட மறந்து விடுவேன். தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். ஒரு சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன். நான் எவ்வளவு குறைவாக என்னைக் கவனித்துக்கொண்டேனோ, இப்போது அதைவிட அதிகமாக கவனித்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது.” என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com