அப்போ மெஹருன்னிஷா இப்போ அனார்கலி... தொடர்ந்து வரலாற்றுக் கதாபாத்திரங்களை ஏற்கும் நாயகி!

அப்போ மெஹருன்னிஷா இப்போ அனார்கலி... தொடர்ந்து வரலாற்றுக் கதாபாத்திரங்களை ஏற்கும் நாயகி!

அப்போ மெஹருன்னிஷா இப்போ அனார்கலி... தொடர்ந்து வரலாற்றுக் கதாபாத்திரங்களை ஏற்கும் நாயகி! தாஜ் டிவைடெட் பை பிளட் (ரத்தத்தால் பிளவுபட்ட தாஜ்) எனும் பொருள் தரக்கூடிய வெப் சீரிஸ் ஒன்றில் அதிதி ராவ் ஹைதாரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரபல நடனக்கலைஞரான 'அனார்கலி' வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

மொகலாயர்கள் காலத்தை பேசுபொருளாக எடுத்துக் கொண்டால் அதில் நிச்சயம் அனார்கலி என்ற பெயருக்கு பிரத்யேகமான ஒரு இடம் உண்டு. காலத்தால் அழியாத கதாபாத்திரங்களில் அனார்கலியும் ஒன்று. இளவரசர் சலீமின் காதலியாகக் கருதப்பட்ட அனார்கலி வரலாற்றுக் கதாபாத்திரமா அல்லது கற்பனைக் கதாபாத்திரமா என்ற கேள்விக்கு இப்போதும் பொருத்தமான விடை கிடைத்த பாடில்லை. ஆயினும் அனார்கலி சலீம் கை கூடாத காதல் கதைக்கு ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.

அதிதி ராவ் ஹைதாரி ஹைதராபாத்தின் புகழ்மிக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அனார்கலி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது. இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டில் அதிதி ராவ் பத்மாவத் எனும் திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியின் மனைவியான மெஹ்ருன்னிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ”எனக்குத் தொடர்ச்சியாக நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றுத் தொடர்பான கதைகளில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதும் அதில் ஒரு பகுதியாக நான் இருப்பதும் என்னால் நம்ப முடியாததாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அத்தகைய கதாபாத்திரங்களுக்காகத் தேர்வாகும் போது நான் மிகப்பெருமையாக உணர்கிறேன். இதை எனக்கான பாராட்டாகவும் நான் எடுத்துக் கொள்கிறேன்” என்கிறார் அதிதி.

மார்ச் 3 அன்று ஜீ 5 தளத்தில் வெளியான இந்த வெப்சீரிஸ் அதிகப் பேரால் விரும்பிப் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றாகி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com