
பாலிவுட் திரையுலகில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடி மிகவும் பிரபலம்! இந்நிலையில் அபிஷேக் பச்சன் தினமும் இரவு தூங்குவதற்கு முன் மனைவி ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஜோடி ஒரு நேர்காணலில் கூறியதாவது:
மற்ற எல்லா சாதாரண தம்பதிகள் போல எங்களுக்கும் இடையே அடிக்கடி சிறு கருத்து வேறுபாடுகள் வரும். அபிஷேக் பச்சனுடன் அடிக்கடி வாதம் செய்வேன். ஆனால் பிரச்சினைகளை உடனுக்குடன் மனம் விட்டுப் பேசி தீர்த்து கொள்வோம். அதனால் இதுவரை பெரிய பிரச்னைகள் எதுவும் வரவில்லை என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
ஆனால், அபிஷேக் பச்சன் தினமும் இரவு தூங்கும் முன் ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்பாராம்! அவர் சொன்ன இந்த விஷயம் வைரலாகிறது.
எந்த விஷயமாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால், அத்துடன் தூங்கச் செல்ல மாட்டோம். அதைப் பற்றி விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்பே மனம் நிம்மதி அடையும். அதில் என் பக்கம் தவறு இருந்தால் தயங்காம்மல் மன்னிப்பு கேட்பேன். தினமுமே இரவில் தூங்குவதற்கு முன் மனைவியிடம் மன்னிப்பு கேட்பது என் வழக்கம். அன்றைய தினத்தில் என்னையறியாமல் ஏதாவது ஒரு விஷயத்தில் அவர் மனதைப் புண்படுத்தி இருக்கலாம் அல்லவா? அதனால்தான் இப்படியொரு பழக்கத்தைக் கடைபிடிக்கிறேன்.
–இவ்வாறு அபிஷேக் பச்சன் சொன்ன விஷயம் வைரலாகியுள்ளது.