விஜய் அடுத்த படத்தில் இதைத்தான் எதிர்பார்க்கிறார்! அதற்கு ஓகே சொன்ன வெங்கட் பிரபு!

விஜய் அடுத்த படத்தில் இதைத்தான் எதிர்பார்க்கிறார்! அதற்கு ஓகே சொன்ன வெங்கட் பிரபு!

அங்க சுத்தி, இங்க சுத்தி, அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், கோபி சந்த் மலினேனி என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டு, கடைசியாக வெங்கட் பிரபுதான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக பரவி வருகிறது.

சமீபத்தில், வெங்கட் பிரபு, நடிகர் விஜய்யை சந்தித்து, தனது கதை குறித்த ஒன்லைன் ஸ்டோரியை கூறியதாகவும், அதைக் கேட்டதும் விஜய்க்கு பிடித்துப்போனதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, அதற்கான முழு ஸ்கிரிப்டை உருவாக்குமாறு விஜய் தரப்பில் கூறப்பட்டதாகவும் தகவல்கள் அறியப்படுகிறது.

அதற்கு ஒரு கண்டிஷனையும் போட்டதாக கூறப்படுகிறது. அதாவது 2011ல் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'மங்காத்தா' திரைப்படம் தளபதியின் மனதை வெகுவாகக் கவர்ந்ததாம். அதனால் தனக்கும் அதுபோன்ற சஸ்பென்ஸ், த்ரில்லர் நிறைந்த கதை வேண்டும் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தை ஒரு ஷார்ட் டைம் படமாக எடுத்து முடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

ஏற்கனவே பல பேட்டிகளில் விஜய்யை வைத்து வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் படமெடுக்க விருப்பம் என்று கூறிவந்த வெங்கட் பிரபுவுக்கு, இப்போது தளபதியே ஓ.கே. சொன்னதால், அவருடைய கண்டிஷனுக்கும் வெங்கட் பிரபு ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

'தளபதி 68' குறித்த தகவல்கள் இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், 'தளபதி 68' படத்தை, முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக வெங்கட் பிரபு இயக்கும் செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com