பிப்ரவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் லால் சலாம். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் போனது. தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான லவ்வர் படமும், சைரன் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வடக்குப்பட்டி ராமசாமி படமும் இந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெறாமல் போனது. இந்த நிலையில் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் விவரம் குறித்து பார்க்கலாம்.
நினைவெல்லாம் நீயடா: இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆதிராஜன் இயக்கியுள்ளார். பள்ளி பருவ காதலை மையப்படுத்தி வரும் இந்த படத்தில் நடிகர் பிரஜன், சினாமிகா, மனிஷா யாதவும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பாம்பாட்டி: வடிவுடையான் இயக்கி உள்ள இந்த படத்தில் ஜீவன், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தி பாய்ஸ்: கஜினிகாந்த், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் அடுத்து இயக்கி உள்ள படம் தி பாய்ஸ். இந்த படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார், ஷாரா, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டார்க் காமெடி அடல்ட் திரைப்படமாக உருவாகி உள்ள இந்தப் படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது.
ரணம்: ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ரணம். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லராக உருவாகி உள்ள இந்த பட வரும் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது.
பைரி: ஜான் கிளாடி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர் உட்பட பலர் நடித்துள்ள படம் பைரி. டி.கே புரொட்க் ஷன்ஸ் சார்பில் இந்த படத்தை வி.துரைராஜ் தயாரித்துள்ளார். புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வித்தைக்காரன்: அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் வித்தைக்காரன். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி இந்த படத்தை தயாரித்துள்ளார். சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆபரேஷன் லைலா: ஸ்ரீ காந்த் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் ஆபரேஷன் லைலா. இந்த படத்தில் ஸ்ரீகாந்த், சகிதா ஷர்மா, இமான் அண்ணாச்சி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை செல்ரின் புரொடக் ஷன் சார்பில் செல்வம் பொன்னையன் தயாரித்துள்ளார். இந்த படமும் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது.
கிளாஸ்மேட்ஸ்: மறைந்த நடிகர் மயில்சாமி கடைசியாக நடித்த படம்தான் கிளாஸ்மேட்ஸ். குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ள இந்த படத்தில் அங்கையர் கண்ணன், அபி நக்ஷ்த்ரா, சரவண சக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பர்த்மார்க்: விக்ரமன் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பர்த்மார்க். சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஷபீர் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மிர்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமும் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது.
காதல், காமெடி, திரில்லர் என அனைத்து ஜானரிலும் படங்கள் வெளியாகிறது. இதில் எந்த படம் அமோக வெற்றி பெறும், எந்த படம் தோல்வியை தழுவும் என அடுத்த வாரம் தெரியவரும்.